Jai Bhim Award: சிறந்த படம்.. சிறந்த துணை நடிகர்.. விருதுகளை குவிக்கும் ஜெய்பீம் படம்!!
முன்னதாக, ஐஎம்டிபி இணையதளத்தில் ஜெய் பீம் திரைப்படம் முதலிடம் பிடித்து புதிய சாதனையைப் படைத்தது. ஐஎம்டிபி உலகளவில் புகழ் பெற்ற இணையங்களில் ஒன்றாகும்.
சூர்யா, மணிகண்டன், லிஜோமோல், பிரகாஷ் ராஜ் நடிப்பில் த.செ. ஞானவேல் இயக்கியிய படம் ஜெய் பீம். ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில் உருவான இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.
முதனை கிராமத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவரை காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் அடித்து கொன்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான ஜெய் பீம் சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. ராஜாக்கண்ணு மரணத்திற்கு நீதி பெற்று தந்த நீதியரசர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.
அதனை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூ டியூப் சேனலில் ஜெய்பீம் திரைப்படம் தொடர்பான வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. படத்தின் காட்சிகளும், இயக்குநர் ஞானவேலின் நேர்காணலும் அதில் இடம்பெற்றது. தமிழ் சினிமாவுக்கும், ஜெய்பீம் படக்குழுவுக்கும் கிடைத்த அங்கீகாரம் என பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், 12வது தாதாசாஹப் பல்கே திரைப்பட விருதுகளில் ஜெய் பீம் திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றிருக்கிறது. திரைத்துறையில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு அளிக்கப்படும் இந்த விருது நிகழ்ச்சியில், ஜெய் பீம் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருதை ராஜாக்கண்ணு கதாப்பாத்திரத்தில் நடித்த மணிகண்டனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாதாசாஹப் விருதுகள் வென்றிருக்கும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
#JaiBhim wins the Best Film & Best Supporting Actor awards at the #DadaSahebPhalkeFilmFestival
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 3, 2022
Thank you @dadasahebfest for the honour!
Congratulations #Manikandan on winning the Best Supporting actor
➡️https://t.co/8pwZaoeO17@Suriya_offl #Jyotika @tjgnan @rajsekarpandian
முன்னதாக, ஐஎம்டிபி இணையதளத்தில் ஜெய் பீம் திரைப்படம் முதலிடம் பிடித்து புதிய சாதனையைப் படைத்தது. ஐஎம்டிபி உலகளவில் புகழ் பெற்ற இணையங்களில் ஒன்றாகும். இதில், ஜெய் பீம் படம் 53,000 வாக்குகள் பெற்று, 9.6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக பின் 'தி ஷஷாங் ரிடம்ஷன்' திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்