Suriya 43: தாமதமாகும் வாடிவாசல்... சுதாகொங்கராவுடன் மீண்டும் கூட்டணி சேர சூர்யா ப்ளான்..!
சுதா கொங்காரா இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் நடிகர் சூர்யா.கேங்ஸ்டர் கதையாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
![Suriya 43: தாமதமாகும் வாடிவாசல்... சுதாகொங்கராவுடன் மீண்டும் கூட்டணி சேர சூர்யா ப்ளான்..! Suriya 43 Update Suriya to Reuniute with Sudha Kongara as Vetrimaaran Vaadivasal Shooting Delayed Suriya 43: தாமதமாகும் வாடிவாசல்... சுதாகொங்கராவுடன் மீண்டும் கூட்டணி சேர சூர்யா ப்ளான்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/f4d77eda31defcf0c06e584b6d9c0dd51686575713552571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் சூர்யா.
சுதா கொங்கராவுடன் சூர்யா கூட்டணி:
நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஒருபுறம் இந்தப் படத்தின் படபிடிப்பு அதிவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கு மறுபக்கம் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் வேலைகள் நடைபெற்று வந்தன. வாடிவாசல் திரைப்படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி என்னவென்றால் சில காரணங்களால் வாடிவாசல் திரைபடம் வெளியாக காலதாமதம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோகமான செய்தியைத் தொடர்ந்து ஒரு ஆறுதலான தகவல் என்னவென்றால் இதற்கிடையில் சுதா கொங்காரா இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சூரரைப் போற்று திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைகிறது.
வாடிவாசல் தாமதத்திற்கு காரணம் என்ன?
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாடிவாசல். எழுத்தாளர் சி. சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். சூர்யா இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் வாடிவாசல். பல்வேறு காரணங்களால் படபிடிப்பு முடிய தாமதமாகி வந்த வாடிவாசல் விடுதலைப் படத்திற்குப் பின் தொடங்கும் என் எதிர்பார்க்கப்பட்டது அதற்குள்ளாக விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டார் வெற்றிமாறன்.
விடுதலை இரண்டாம் பாகம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்த்து வந்தார்கள் சூர்யா ரசிகர்கள். காரணம் விடுதலைப் படத்தின் வேலைகள் முடிவடைந்த பின்னரே வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. தற்போது விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகளில் வெற்றிமாறனுக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் அந்த காட்சிகளை மீண்டும் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன். இந்த வேலைகள் எல்லாம் முடிந்து விடுதலை படத்தின் இரண்டாம பாகம் வெளியாவதற்கு இந்த ஆண்டு இறுதியை எட்டிவிடும். இதன் காரணத்தால் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு மேலு தள்ளிப்போகும்.
சுதா கொங்காரா
இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொள்ள நினைத்த சூர்யா சுதா கொங்காரா இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். ஒரு பீரியட் கேங்ஸ்டர் பற்றியத் திரைப்படமாக இந்தப் படம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் சூர்யா ரசிகர்களுக்கு மனவருத்தம் இருந்தாலும் அந்த மனவருத்தத்தைப் போக்கும் வகையில் இந்தப் புதிய தகவல் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)