மேலும் அறிய

The Kerala Story: 'தி கேரளா ஸ்டோரி'  படத்துக்கு தடை கேட்டு கேரள அரசு வழக்கு.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்

தி கேரளா ஸ்டோரி  படத்துக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதனை உடனடி வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துள்ளனர். 

தி கேரளா ஸ்டோரி  படத்துக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதனை உடனடி வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துள்ளனர். 

தி கேரளா ஸ்டோரி

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில்  இந்தியில்  உருவாகியுள்ள படம் “தி கேரளா ஸ்டோரி”. அதா ஷர்மா , பிரணவ் மிஷ்ரா , யோகிதா பிஹானி , சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படமானது கேரளாவைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு  மாற்றப்பட்டு இஸ்லாமிய நாடான ஈராக் மற்றும் சிரியாவில் ISIS அமைப்பில் சேருவதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இது உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படம் வரும் மே 5 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. 

எதிர்ப்பு தெரிவித்த அரசு 

முன்னதாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது. அப்போதே கேரளா அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார். 

அவர் தனது பேஸ்புக் பதிவில், “கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய சங்பரிவார் அமைப்புகள் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக அவர்களின் கொள்கைகளை பரப்புரை செய்ய எடுக்கப்பட்ட படம் என தி கேரளா ஸ்டோரியை குறிப்பிட்டார். இப்படமானது வகுப்பு பிரிவினை வாதம் மற்றும் கேரளாவிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் நோக்கத்துடன் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தார். 

படக்குழுவினர் கோரிக்கை 

இப்படியான நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தில் கேரள அரசுக்கு எதிரான கருத்துகள் எதுவும் இல்லை. படத்தில் எந்த காட்சியும் தரக்குறைவாக கூறப்படவில்லை. இப்படம் தீவிரவாதிகளை குறிவைக்கிறதே தவிர, முஸ்லிம்களை குறிவைக்கவில்லை. எனவே கேரளா முதல்வர் பினராயி விஜயன் படத்தை பார்க்க வேண்டும் என தயாரிப்பாளர் விபுல் ஷா கோரிக்கை விடுத்திருந்தார். 

இதேபோல் இயக்குநர் சுதிப்தோ சென் கூறுகையில்,  பல மாத ஆராய்ச்சிக்குப் பிறகு நான் படத்தைத் இயக்கினேன். பாதிக்கப்பட்டவர்களுடன் பேசிய பிறகு நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன் என தெரிவித்தார். இப்படியான நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இப்படியான சூழலில் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget