Coolie: சம்பவம் இருக்கு! ரஜினிகாந்த் படத்தில் கெஸ்ட் ரோலில் அமீர்கான் - இது லிஸ்ட்லயே இல்லயே
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் நேற்று முன்தினம் வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கூலி படத்தில் அமீர்கான்?
வேட்டையன் படம் நடித்துக் கொண்டிருக்கும்போதே நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்திற்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சத்யராஜ், நாகர்ஜூனா, உபேந்திரா, செளபின் சாஹிர் என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரஜினி மற்றும் அமீர்கான் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்த பிறகு கேமியோ கதாபாத்திரங்கள் மீது தனி எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு:
கூலி படம் லோகேஷ் கனகராஜின் வழக்கமான ஆக்ஷன் அதகளத்துடன் தங்கக்கடத்தலை மையப்படுத்தி தந்தை – மகள் பாசத்தை மையப்படுத்தி உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் அமீர்கான் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது படத்தில் அமீர்கானின் கதாபாத்திரம் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பை தற்போதே ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்தின் கூலி படத்தில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகரும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் நடித்திருந்தார். தற்போது மீண்டும் பாலிவுட் பிரபலமான அமீர்கான் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பது கூலி மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ரஜினிகாந்தும் அமீர்கானும் இணைந்து 1995ம் ஆண்டு வெளியான ஆதங் ஹி ஆதங் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
சத்யராஜ், நாகார்ஜூனா
கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கூலி படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயரும் வெளியிடப்பட்டுவிட்டது. ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்திலும், நாகர்ஜூனா சைமன் என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்திலும். சௌபின் சாஹிர் தயாள் என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா கலீஷா என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.