மேலும் அறிய

Rajinikanth: போயஸ் கார்டனில் பரபரப்பு; சசிகலா வீட்டிற்கு எண்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் வி.கே. சசிகலாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் வி.கே. சசிகலாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே,  ஜெயலலிதாவின் நெருங்கி தோழியான வி.கே சசிகலா புதிய பங்களா வீடு கட்டினார்.  இந்த புதிய வீட்டிற்கு ஜனவரியில் புதுமனை புகுவிழா நடத்தப்பட்டது. ஆனால் அவர் அப்போது குடியேறவில்லை. ஜெயலலிதா பிறந்தநாளான இன்று பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தான் கட்டிய புதிய பங்களாவுக்கு குடியேறினார். புதுமனை புகுவிழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் செல்லமுடியவில்லை. அதனால்தான் இன்று சசிகலாவின் வீட்டிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்றதாக கூறப்படுகின்றது. 

 ஜெயலலிதா மறைவுக்கு பின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் சசிகலா வசித்து வந்தார். அதன் பின் சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து கடந்த 2020-ஆம் ஆண்டு பெங்களூரு சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா தியாகராய நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். 

இந்த நிலையில் போயஸ் கார்டன் வேதா இல்லம்., அதாவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டின் எதிரே  மூன்று தளம் கொண்ட பிரம்மாண்ட பங்களாவை கட்டி முடித்தார். இந்த வீட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி புதுமனை புகுவிழா நடத்தினார் சசிகலா. 

போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில்  30 ஆண்டுகளுக்கு மேலாக தங்கி நிழல் அரசாங்கமாகவே செயல்பட்டு வந்தார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது வேதா இல்லம் ரத்த சொந்தமான தீபா, மாதவனுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி கைமாறியது குறிப்பிடத்தக்கது. மேலும், போயஸ் கார்டன் தனக்கு ராசியான இடம் என சசிகலா கருதுவதால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் குடியேறியுள்ளார். இந்த சூழலில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், தீவிரமாக இறங்குவார் என  ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சசிகலா வீட்டிற்கு வருகை புரிந்துள்ளது போயஸ்கார்டன் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், இந்த வீடு சசிகலாவிற்கு புகழ், செல்வம், பெயர் மற்றும் நிம்மதி ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். வீட்டின் புதுமனைப் புகுவிழாவின்போது என்னால் வரமுடியவில்லை. அதனால்தான் இன்று வந்தேன் எனக் கூறினார். சசிகலா வீட்டிற்கு வந்த ரஜினிகாந்த் அவருக்கு ஒரு பரிசு கொடுத்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK New alliance: அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
TVK VIJAY: விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ
விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ..
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; வலங்கைமான் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது! 
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; வலங்கைமான் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது! 
ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK New alliance: அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
TVK VIJAY: விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ
விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ..
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; வலங்கைமான் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது! 
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; வலங்கைமான் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது! 
குழந்தைகளின் மனநலம் காக்க யுனிசெஃப் தரும் 10 வழிகள்! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
குழந்தைகளின் மனநலம் காக்க யுனிசெஃப் தரும் 10 வழிகள்! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
Honda Elevate : பாராட்டுனது குத்தமா? இருக்கும் ஒத்த எஸ்யுவிக்குமான விலையையும் ஏற்றிய ஹோண்டா- வொர்த்தா?
Honda Elevate : பாராட்டுனது குத்தமா? இருக்கும் ஒத்த எஸ்யுவிக்குமான விலையையும் ஏற்றிய ஹோண்டா- வொர்த்தா?
Parasakthi: ஆன்லைனில் புலம்பிய பராசக்தி தயாரிப்பாளர்.. புரட்டி எடுக்கும் விஜய் ரசிகர்கள் - நடந்தது என்ன?
Parasakthi: ஆன்லைனில் புலம்பிய பராசக்தி தயாரிப்பாளர்.. புரட்டி எடுக்கும் விஜய் ரசிகர்கள் - நடந்தது என்ன?
விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.! முதலமைச்சரை விளாசும் இபிஎஸ்
விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.! முதலமைச்சரை விளாசும் இபிஎஸ்
Embed widget