ரஜினிகாந்த் "நோ" சொன்ன கதையிலா விஜய் நடிக்கிறார்..? தயக்கம் காட்டும் ரசிகர்கள்..!
நடிகர் ரஜினிகாந்த் நடிக்க மறுத்த கதையில்தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருப்பதற்கு ரசிகர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி பைடபல்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு கூறிய கதையில்தான் தற்போது நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கான கதையில் விஜய் நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ரஜினிகாந்தே வேண்டாம் என்ற கதையில் விஜய் நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு சற்று தயக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மெகா ஹிட் அடித்தது.
ஆனால், அந்த படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரத்தை காட்டிலும் வில்லன் கதாபாத்திரமான பவானி கதாபாத்திரம் மிகவும் மாஸாக அந்த படத்தில் காட்டப்பட்டிருந்தது. நடிகர் விஜய் சேதுபதிக்கும், நடிகர் மகேந்திரனுக்கும் அந்த கதாபாத்திரங்கள் நல்ல பெயரை பெற்றுத்தந்தன.
இந்த காரணங்களாலும் விஜய்க்கு அதிகளவில் மாஸ் உள்ள ஒரு கதையை உருவாக்குமாறு லோகேஷ் கனகராஜூக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் விஜய் ரசிகர்களாலே கடும் விமர்சனங்களை சந்தித்தது. இதனால், விஜய்க்கு பீஸ்ட் படம் ஒரு சறுக்கலாகவே அமைந்தது.
தோழா படத்தை இயக்கி வம்சி நிச்சயம் குடும்பப்பாங்கான பின்னணியிலே விஜய்யின் 66வது படத்தை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கலாம். இதனால், அவரது அடுத்த படம் ஒரு மாஸ் ஹீரோவிற்கான கதையாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். இன்னும் சிலர் நடிகர் விஜய்க்கான கதையை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது தேர்வு செய்யாததும் இந்த சறுக்கல்களுக்கு காரணமாக அமைகிறது என்றும் சிலர் விமர்சித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்