Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
நடிகர் ரஜினிகாந்த் முதல்முறையாக ஒரு படத்தின் 2ம் பாகத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே பாட்ஷா, பேட்ட ஆகிய படங்களின் வாய்ப்பு வந்தபோது அதனை மறுத்த நிலையில் ஜெயிலர் 2 படத்தில் மட்டும் நடித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், அப்படம் இணையவாசிகளின் விமர்சனங்களில் இருந்து தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயிலர் - ஜெயிலர் 2 படம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ம் ஆண்டு வெளியான படம் “ஜெயிலர்”. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில் குமார், விநாயகன், மிர்னா மேனன், வசந்த் ரவி, விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த ஜெயிலர் படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ கேரக்டரில் நடித்து அசத்தினர். ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் ரூ.600 கோடி வசூலையும் ஈட்டியது. படத்தின் பின்னணி இசை இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் ஜெயிலர் 2 படம் தற்போது உருவாகி ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 15ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் இருந்தவர்களோடு இம்முறை, எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரபோர்த்தி, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன், பகவதி பெருமாள், சுஜித் ஷங்கர், கோட்டயம் நசீர், ஜடின் சர்னா, நமோ நாராயணா, அன்னா ராஜன் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியான நிலையில் ஜெயிலர் 2 மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
ரஜினி நடிக்க முக்கிய காரணம்
நடிகர் ரஜினிகாந்த் முதல்முறையாக ஒரு படத்தின் 2ம் பாகத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே பாட்ஷா, பேட்ட ஆகிய படங்களின் வாய்ப்பு வந்தபோது அதனை மறுத்த நிலையில் இந்த படத்தில் ஏன் நடிக்கிறார் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக பேசிய ரஜினி, ஓடிடியில் ஜெயிலர் படத்தைப் பார்த்தபோது அதில் இரண்டாம் பாகத்திற்காக நெல்சன் பல இடங்களில் காட்சிகளை வைத்திருந்தார். குறிப்பாக வில்லன் கேரக்டரான வர்மன் கடைசியில் தனக்கு பின்னால் மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பதாக கூறியிருப்பார். சரியாக அது இரண்டாம் பாகத்தை எடுக்க அடிப்படையாக அமைந்தது. முதலில் ஜெயிலர் 2 எடுக்கலாம் என சொன்னபோது நெல்சன் மறுத்து விட்டார். ஒரு மாதம் கழித்து ஓகே சொன்னார். சில மாதங்கள் கதையை எழுத அவகாசம் கேட்டு பொறுமையாக எழுதியதை தான் திரையில் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்” என கூறினார்.
வெறிகொண்டு காத்திருக்கும் நெட்டிசன்கள்
இந்த நிலையில் இந்திய சினிமாவில் எந்த மொழியில் படம் வந்தாலும் தங்களுக்கு அதில் உடன்பாடில்லை என்றாலோ, மோசமான படத்திற்கு பிரமாண்ட விளம்பரம் செய்து தியேட்டருக்கு வரவழைத்து ஏமாற்றுவீர்களா என்ற போர்வையிலும் படம் ரிலீசான நேரத்தில் இருந்து சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்வார்கள். இதனால் நியாயமாக கிடைக்க வேண்டிய வசூலே கிடைக்காமல் போய்விடும் சூழல் உண்டாகிறது. தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் தொடங்கி சிறிய நடிகர்கள் படம் வரை எதுவும் தப்பவில்லை. அப்படியான நிலையில் ஜெயிலர் 2 படத்தை கொத்துக்கறி போட ஒரு கூட்டமே காத்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ரஜினி திரைப்பிரவேசம் மூலம் பதிலளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















