மேலும் அறிய

Rajinikanth on Udhayanidhi Stalin: ‘அன்புத்தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்’ - அமைச்சர் உதயநிதிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.இதனையடுத்து தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். திமுகவின் வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பெரும்பான்மையான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். 

இதனையடுத்து அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்று 1 வருடம் கழிந்த பின்பும் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வில்லை  இந்த நிலையில் அண்மையில் அவருக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் ‘உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என சொல்லும் போது அரங்கத்தில் ஆரவாரம் எழுந்தது. பின்னர் ஆளுநர் பூங்கொத்து கொடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்ற உதயநிதி அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட குடும்ப உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

அந்தப்பதிவில், “ தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.

முன்னதாக நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் , வாழ்த்துகிறேன் தம்பி அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது. என்று பதிவிட்டு அமைச்சர் உதயநிதிக்கு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்து இருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவாரத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவாரத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவாரத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவாரத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
அடுத்து 2169 ஆண்டுதான்.! நிறைவடையும் மகா கும்பமேளா.! புனித நீராடல், ரயில் கண்ணாடி உடைப்பு, உயிரிழப்பு.!
அடுத்து 2169 ஆண்டுதான்.! நிறைவடையும் மகா கும்பமேளா.! புனித நீராடல், ரயில் கண்ணாடி உடைப்பு, உயிரிழப்பு.!
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
Embed widget