Beast new poster: ஐந்து மொழிகளில் ரிலீஸ்... ஸ்டைலா, கெத்தா வெளியானது ‘பீஸ்ட்’ ரிலீஸ் போஸ்டர்
பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. திரையரங்குகளில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்துள்ளார். பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. திரையரங்குகளில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடா மொழிகளில் பீஸ்ட் படம் வெளியாக இருப்பதாக அப்டேட் வந்திருக்கிறது. அந்தந்த மொழி போஸ்டர்களும் வெளியாகி உள்ளன. இந்த போஸ்டர்கள் வைரலாகி வருகின்றது.
#பீஸ்ட் #బీస్ట్ #ബീസ്റ്റ് #ಬೀಸ್ಟ್ #रॉ
— Sun Pictures (@sunpictures) March 26, 2022
From April 13th 🔥@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastFromApril13 #Beast pic.twitter.com/qwIOvTdbWW
முன்னதாக, பீஸ்ட் படத்திற்கு 'யு' அல்லது 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, சென்சார் முடிந்ததும் 'பீஸ்ட்' படத்தின் ரிலீஸ் தேதி சிறப்பு போஸ்டருடன் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதே போல, படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் போஸ்டரில், படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
#ThalapathyVijay’s motivational JollyOGym-gaana 😍
— Sun Pictures (@sunpictures) March 22, 2022
📹 https://t.co/rD02V4m4VF
🎵 https://t.co/Ort3lFQygp
@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @kukarthik1 @hegdepooja @manojdft @AlwaysJani @Nirmalcuts #Beast #JollyOGymkhana #BeastSecondSingle pic.twitter.com/XOfWC7jC1b
பீஸ்ட் படத்தில் உள்ள அரபிக்குத்து பாடலுக்கு சமந்தா முதல் குட்டி குழந்தை வரை நடனமாடிய வீடியோக்கள் வைரலானது. அந்த வரிசையில் இப்போது டோலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக இருக்கும் க்ரித்தி ஷெட்டி, அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இரண்டாவதாக ரிலீஸான ஜாலியோ ஜிம்கானா பாடலும் ஹிட்டாகி இருக்கும் நிலையில், படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்