SS Rajamouli Movie: அட எம்புரானே.!! ராஜமௌலி படத்துல லேட்டஸ்டா இணைஞ்சுருக்கற ஸ்டார் யார் தெரியுமா.?
டோலிவுட் மட்டுமல்லாமல், இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறது, மகேஷ் பாவுவை வைத்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பில், ஒரு லேட்டஸ்ட் ஹிட் ஸ்டார் இணையவிருக்கிறார்.

டோலிவுட்டில், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் படம், பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியுடன், டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இணைந்துள்ள அவரது 29-வது படம். விரைவில் துவங்கும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில், லேட்டஸ்டாக, இயக்கம் மற்றும் நடிப்பில் கலக்கி, ஹிட் படம் ஒன்றை கொடுத்த ஒரு ஸ்டார் இணையவிருக்கிறார். அவர் யார் என்பதைத்தான் பார்க்கப் போகிறோம்.
பிரமாண்ட இயக்குனருடன் இணைந்துள்ள பிரமாண்ட நடிகர்
தெலுங்கு திரை உலகமான டோலிவுட் என்றாலே பிரமாண்டத்திற்கு பஞ்சமில்லை. அங்கிருந்து உருவாகி உலக அளவில் கலக்கும் பிரமாண்ட இயக்குனராக வலம் வருபவர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவரது ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. இவர் அடுத்ததாக, டோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் பிரமாண்ட நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு மிகப்பிரமாண்டமான படத்தை இயக்குகிறார். இது மகேஷ் பாபுவின் 29-வது திரைப்படம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார்.
ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆப்பிரிக்க காடுகளை பின்னணியாகக் கொண்ட இந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி, ஒரு ஷெட்யூல் முடிந்துள்ளது.
ஷூட்டிங்கில் இணையும் லேட்டஸ்ட் ஹிட் ஸ்டார் பிரித்விராஜ்
எஸ்எஸ் ராஜமௌலியின் திரைப்படத்தின் படப்பிடிப்பில் மற்றொரு மாஸ் ஸ்டார் இணைய இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, லேட்டஸ்டாக சூப்பர் ஹிட் அடித்த எல்2 எம்புரான் திரைப்படத்தின் இயக்குநரும், நடிகருமான பிரித்விராஜ்தான்.
மோகன்லாலும் அவரும் இணைந்து நடித்திருந்த எல்2 எம்புரான் திரைப்படம் மாஸ் ஹிட் அடித்து, பிரித்விராஜை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது. ஏற்கனவே அவர் ஒரு நல்ல நடிகர் என்பது எல்லோருக்குமே தெரியும். இந்த நிலையில், தன்னை ஒரு இயக்குநராகவும் அவர் நிரூபித்துள்ளார்.
அவர் தற்போது, விரைவில் தொடங்கும் ராஜமௌலியின் படத்தின் படப்பிடிப்பில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் வில்லன் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு முக்கியமான கேரக்டரில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையை ராஜமௌலி சொன்ன உடனேயே பிரித்விராஜ் ஓ.கே சொல்லிவிட்டாராம். இந்த படம், பிரித்விராஜுக்கு இரண்டாவது நேரடி தெலுங்கு திரைப்படமாகும். ஏற்கனவே, சலார் திரைப்படத்தில் பிரபாசுடன் இணைந்து நடித்ததே அவருக்கு நேரடி முதல் தெலுங்கு திரைப்படம்.
இந்நிலையில், படத்தை பற்றிய மற்ற விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த மெகா திரைப்படம் 2027-ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















