Spider Man Box Office: வசூல் ராஜாவாக வலம் வரும் ஸ்பைடர் மேன்... முதல் வார வசுல் எவ்வளவு தெரியுமா?
உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த Spider-Man : No Way Home வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் 108.37 கோடி வசுல் செய்துள்ளது
ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய Spider-Man : No Way Home படத்தின்
ட்ரெய்லர் யூடியூபில் வெளியான 24 மணி நேரத்தில் 355.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. டாம் ஹாலண்ட், பெனடிக்ட் கம்பர்பேட்ச், ஜெண்டயா, பீட்டர் பார்க்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப் படம் கடந்த வாரம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. வெளியான அன்றைய நாள் முதல் இன்றுவரை ரசிகர்களின் அமோக வரவேற்போடு வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில், இந்தப்படத்தின் தற்போதைய வசுல் விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.
அந்தத் தகவல்களின் படி, Spider-Man : No Way Home படம் இந்தியாவில் மட்டும் கடந்த 4 நாட்களில் மட்டும் 108. 37 கோடி வசுலித்துள்ளது. இந்த ரெக்கார்டின் படி இந்தியாவில் வெளியாகி வார இறுதி நாட்களில் அதிகம் வசுலித்த ஹாலிவுட் படங்களில் Spider-Man :No Way Home படம் இராண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
உலக அளவில் 138. 55 கோடி வசுலித்துள்ள Spider-Man : No Way Home உலக அளவில் வார இறுதி நாட்களில் அதிகம் வசுலித்த ஹாலிவுட் படங்களில் 5 வது இடத்தை பிடித்துள்ளது.
வசுல் விபரங்கள்
வியாழக்கிழமை வசுல் விபரம்
இந்தியா - 32.67 கோடி
உலகம் - 41.50 கோடி
வெள்ளிக்கிழமை வசுல் விபரம்
இந்தியா - 20.37 கோடி
உலகம் - 25.67 கோடி
சனிக்கிழமை
இந்தியா - 26.10 கோடி
உலகம் - 33.67 கோடி
ஞாயிற்று கிழமை
இந்தியா - 29.23 கோடி
உலகம் - 37.71 கோடி
மொத்தம்
இந்தியா - 108.37 கோடி
உலகம் - 138.55 கோடி
View this post on Instagram