மேலும் அறிய

நடிகை நயன்தாரா பற்றி பேசிய சி.வி.சண்முகம் - நடிகர் சங்கத்தின் ரியாக்‌ஷன் என்ன?

எங்கள் சகோதரி நயன்தாராவை உட்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது - தென்னிந்திய நடிகர் சங்கம்

நடிகை நயன்தாரா குறித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் அவர்களுக்கு, சமீபத்தில் தாங்கள் பேசிய மிகவும் கீழ்த்தரமான கேட்கவே கூசுகின்ற காணொளி எங்கள் பார்வைக்கு வந்தது. தொடர்ந்து நடிகர் சமூகத்தின் கண்டனங்களும் கோபங்களும் கைப்பேசி வழியாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. தேர்தல் களத்தில் கருத்துரீதியாக கொள்கைரீதியாக கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அடிப்படை கண்ணியத்தோடு, அதுவும் பொறுப்பில் இருக்கின்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாளவேண்டி இருக்கிறது. ஆனால் தாங்கள் சபை நாகரீகத்தை விட்டொழித்து ஒலிபெருக்கி மூலமாக எங்கள் சகோதரி நயன்தாராவை உட்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஐயா அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். சரி மக்கள் காண்கின்ற கனவை நினைவாக்கித் தர அண்டை நாட்டிடமா கேட்க முடியும்.

மக்களின் கனவு என்பது, ஒரு ஏழையின் கூரையாக இருக்கிறது, விவசாயி மகனின் கல்வியாக இருக்கிறது, நடுத்தர வர்க்கத்தின் பெண்ணின் வேலை வாய்ப்பாக இருக்கிறது, தொழிலதிபர்களின் உள்கட்டமைப்பாக இருக்கிறது, எல்லை காக்கும் ராணுவ வீரனுக்கு பாதுகாப்பாக இருக்கிறது, ஆனால் தங்கள் கனவு என்னவாக இருக்கிறது என்று வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாக பேசியதற்கு  பாராட்டவா முடியும்.  

இது பெண்களின் யுகம் அவர்கள் இல்லாத துறையே இல்லை வான் கிழிக்கும் ராக்கெட்டில் இருந்து மருத்துவராக, ஆசிரியராக, வழக்கறிஞராக, பெரும் இயந்திரங்களை இயக்குபவர்களாக, பேருந்து ஓட்டும் பெண்களை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. அரசியலில் கோலோச்சிய இந்திரா காந்தி அம்மையார் உங்கள் தலைவி ஜெயலலிதா அம்மையாரை விடவா உதாரணம் இருக்க முடியும். அப்படி இருக்க, சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம். இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா? தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது அவர்கள் ஆமோதிக்கிறார்களா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற மரியாதை இன்னும் இருக்கிறது என்ற காரணத்தினால் நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் கேட்கிறோம்… தங்களிடமிருந்து மன்னிப்பும் இனி எங்கள் துறை சார்ந்த பெண் திறன்களை மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்கின்ற உத்தரவாதமும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Embed widget