இன்சூரன்ஸ் போட்டு தான் நடிக்கவே போனேன்...மண்டாடி படம் குறித்து சூரி பகிர்ந்த தகவல்
தனது மொத்த குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் எடுத்துவிட்டுதான் மண்டாடி படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றதாக நடிகர் சூரி தகவல் தெரிவித்துள்ளார்

சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் மண்டாடி திரைப்படம் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் படம் குறித்த பல்வெறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை பகிர்ந்து வருகிறார் சூரி. அந்த வகையில் மண்டாடி படத்தின் படப்பிடிப்பிற்கு செல்லும் போது தனக்கும் தனது மொத்த குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் எடுத்துவிட்டு சென்றதாக சூரி கூறிய தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மண்டாடி
மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். சூரியுடன் மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ், ரவீந்திர விஜய், அச்யுத் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படகு பந்தயத்தை மையமாகக் கொண்ட கடல் பின்னணியிலான விளையாட்டு ஆக்ஷன் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
2 மாதங்கள் கடலில் படப்பிடிப்பு
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனுபவம் குறித்து பேசிய சூரி, ஆரம்பத்தில் 80 சதவீத காட்சிகளை நீச்சல் குளத்திலும், 20 சதவீத காட்சிகளை மட்டுமே கடலிலும் படமாக்க திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் இறுதியில் திட்டம் மாறி சுமார் இரண்டு மாதங்கள் கடலிலேயே படப்பிடிப்பு நடைபெற்றதாக அவர் கூறியுள்ளார். குடும்பத்தை விட்டு நீண்ட நாட்கள் கடலில் தங்கியிருந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், வீடியோ அழைப்புகள் மூலமாக குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மொத்த குடும்பத்திற்கும் இன்சூரன்ஸ்
மேலும், ‘விடுதலை’ படத்துடன் ஒப்பிடும்போது ‘மண்டாடி’ படத்திற்காக சந்தித்த சிரமங்கள் தனக்கு பல மடங்கு அதிகம் என்று சூரி குறிப்பிட்டுள்ளார். ' மண்டாடி படத்தின் படப்பிடிப்பிற்கு செல்லும் மும் வெற்றிமாறன் சாரிடம் நான் விடுதலை படத்திலேயே நடித்துவிட்டேன் இதை எல்லாம் சமாளித்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு தான் சென்றேன். ஆனால் மண்டாடி படத்துடன் ஒப்பிடும்போது விடுதலை படத்திற்கு நான் எதிர்கொண்ட சவால்கள் வெறும் 10 சதவீதம் தான். பொதுவாக நான் படங்களில் நடிக்க போவதற்கு முன் இன்சூரன்ஸ் எடுப்பதில்லை. ஆனால் படத்தின் கதையை கேட்டப்பின்பு எனக்கும் என் குடுமபத்திற்கும் இன்சூரன்ஸ் எடுத்தபின் தான் படப்பிடிப்பிற்கு சென்றேன். என் மனைவியிடம் நான் திரும்ப வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை மறைமுகமாக சொன்னேன். " என்று தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























