ரெஸ்பெக்ட் கொடுக்கணும்.. சூர்யா சார் மாதிரி ஒரு ஹஸ்பண்ட் வேணும் - நடிகை அபர்ணா சொன்ன ரகசியம்!
எந்த தமிழ் திரைப்படங்களில் வரும் க்ளிஷேவான நாயகிகள் கேரக்டரை விட பொம்மி சற்று மாறுபட்ட கேரக்டர் என்பதால் படம் வெளியானது தொடங்கியே மக்களுக்கு நெருக்கமான கதாப்பாத்திரமாகிவிட்டிருந்தது
சூரரைப் போற்று படத்தில் பிரதானமாகப் பேசப்பட்ட கதாப்பாத்திரங்களில் ஒன்று பொம்மி. அந்த பாத்திரமாக நடித்தவர் மலையாள நடிகர் அபர்ணா பாலமுரளி.பிஹைண்ட்வுட்ஸ் ஊடகத்தின் விருதுகள் நிகழ்வில் தான் படத்தில் பேசிய வசனத்தை பட்டாசாகப் பேசி முடித்ததும் ஆடியன்ஸில் கைதட்டல்.மற்ற எந்த தமிழ் திரைப்படங்களில் வரும் க்ளிஷேவான நாயகிகள் கேரக்டரை விட பொம்மி சற்று மாறுபட்ட கேரக்டர் என்பதால் படம் வெளியானது தொடங்கியே மக்களுக்கு நெருக்கமான கதாபாத்திரமாகிவிட்டிருந்தது.
மேடையில் பேசிய அபர்ணா பாலமுரளியிடம் உங்களுக்கு எந்த மாதிரி லைப் பார்ட்னர் வேண்டும் என எதிர்பாக்கறிங்க என கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், ’நான் ஜோதிகா மேம்-ன் நிறைய இண்டர்வியூக்களை பார்த்திருக்கேன்.அதில் அவங்க சூர்யா சார் எப்படின்னு நிறைய பகிர்ந்திருக்காங்க.அதை பார்த்ததில் இருந்தே எனக்கு சூர்யா சார் மாதிரியான பார்ட்னர்தான் வேணும்னு முடிவு செய்துட்டேன். நான் தேர்ந்தெடுக்கறவர் ரெஸ்பெக்ட் கொடுக்கத் தெரிஞ்சவரா, ஜெண்டில்மென்னா, என் விஷயங்களில் எதுவும் குறுக்கிடாதவரா இருக்கனும்.’ என்றார்.
View this post on Instagram
பொம்மி பாத்திரம் குறித்து கேள்வி எழுப்பியதும், பொம்மியாகத் தான் தோன்ற தன்னைவிட மிகவும் உழைத்தது படத்தின் இயக்குநர் சுதா கொங்கராதான் என்றார். படம் சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு, பல்வேறு விருதுகளையும் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அபர்ணா அண்மையில் ஆர்.ஜே பாலாஜியுடன் வீட்ல விசேஷம் படத்தில் நடித்திருந்தார்.
View this post on Instagram
தற்போது நித்தம் ஒரு வானம் படத்திலும், கார்த்தியுடன் தலைப்பிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.