இரவு பொழுதை இனிமையாக்கும் ஜென்சியின் ப்ளே லிஸ்ட் !
இரவு நேரத்தில் கேட்ககூடிய ஜென்சியின் பாடல்கள் என்னென்ன?
தமிழ் சினிமாவில் பல சிறப்பான ஹிட் பாடல்களை கொடுத்தவர் ஜென்சி அந்தோனி. இவர் 1976 "திரிபுரசுந்தரி" என்ற படத்தில் "வானத்துப் பூங்கிளி" என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகப்படுத்தினார். இளையராஜாவின் இசையில் பல சிறப்பான பாடல்களை ஜென்சி பாடியுள்ளார். கேரளாவில் பிறந்திருந்தாலும் இவருடைய தமிழ் பாடல்கள் அனைத்தும் அவ்வளவு சிறப்பாக இருக்கும். இவருடைய குரலில் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?
1. என் உயிர் நீதானே:
1976ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்த் திரைப்படம் ப்ரியாவில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. கே.ஜே.யேசுதாஸ் மற்றும் ஜென்சி இந்தப் பாடலை பாடியிருப்பார்கள். இளையராஜாவின் இசை இப்பாடலுக்கு மேலும் அழகு சேர்த்து இருக்கும்.
"உன்னருகில்
உன் நிழலில் உன்
மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள்
வாழ்ந்திட வந்தேன்..."
2. ஆயிரம் மலர்களே:
நிறம் மாறாத பூக்கள் திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்பி சைலஜா ஆகியோர் உடன் இணைந்து ஜென்சி இந்தப் பாடலை பாடியிருப்பார். இளையாராஜாவின் இசை மற்றும் இந்த மூவரின் குரல் பாடலுக்கு அதிக வலுவாக அமைந்திருக்கும். மேலும் இப்பாடலின் வரிகளும் சிறப்பாக ஒன்றாக இருக்கும்.
"வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ….
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ..."
3. என் வானிலே:
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜானி திரைப்படத்தில் இந்தப் பாடல் உள்ளது. இந்தப் பாடலில் ஜென்சியின் குரல் மற்றும் இளையராஜாவின் இசை நம்மை மயக்கும் வகையில் இருக்கும். அத்துடன் பாடலை காட்சி படுத்திய விதமும் அழகாக அமைந்திருக்கும்.
"நீ தீட்டும்
கோலங்கள் என்
நெஞ்சம் நான் பாடும்
கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும்
இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா..."
4. காதல் ஓவியம்:
அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் கார்த்திக் ராதாவின் நடிப்பில் அமைந்த சிறப்பான பாடல் இது. இளையராஜாவின் இசை மற்றும் ஜென்சி கூட்டணியில் அமைந்த சிறப்பான காதல் பாடல்களில் இதுவும் ஒன்று.
"காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்..."
5. தம்தன் தம்தன:
புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் அமைந்த பாடல் இது. பாக்யராஜ் நடிப்பில் வெளியான சிறப்பான பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. இளையராஜாவின் இசை மற்றும் பாடலின் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும்.
"சிந்திய பூமலர் சிந்தி விழ
அலைப் போல் உணர்வோ தினம் முந்தி எழ
அந்தியில் வந்தது சந்திரனோ
சந்திரன் போல் ஒரு இந்திரனோ..
முந்தைய நாளினில் எங்களின் முன் ....."
இவை தவிர பல வெற்றிப் பாடல்களை ஜென்சி தனது குரலில் பாடியுள்ளார். குறிப்பாக இளையராஜாவிற்கு இவர் பாடியுள்ள பல பாடல்கள் காலம் தாண்டி வாழும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இரவு பொழுதை அழகாக்கும் பரத்வாஜ் ப்ளே லிஸ்ட் !