Janaki | கொஞ்சும் குரலழகி.. இரவுப் பொழுதை அழகாக்கும் ஜானகியின் ப்ளேலிஸ்ட் !
இரவு பொழுதை இனிமையாக்கும் பாடகி ஜானகியின் அழகான பாடல்கள் என்னென்ன?
தமிழ் திரைப்பட உலகில் நீண்ட நாட்கள் தனது காந்த குரலால் பலரை அடிமையாக்கி வைத்திருந்த பாடகிகளில் ஒருவர் ஜானகி. இவர் ஜானகி அம்மா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். 83 வயதான இவர் 43,000 திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு,கன்னடம்,இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தனது குரலில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவர் 1957ஆம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் பாடல்கள் பாடி வருகிறார். சிங்கார வேலனே தேவா என்ற பாடல் மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார். அன்று முதல் இன்று வரை அந்த குரலில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் அப்படியே இருந்து வருகிறார்.
இரவு பொழுதை இனிமையாக்கும் வகையில் அமைந்துள்ள ஜானகி அம்மாவின் பாடல்கள் என்னென்ன?
1. மச்சானை பாத்தீங்களா:
இசைஞானி இளையராஜாவின் முதல் படமாக அன்னக்கிளியில் இடம்பெற்ற பாடல் இது. அந்தப் படத்தில் அன்னக்கிளி உன்னை தேடுது மற்றும் இந்தப் பாடல் மிகப் பெரிய ஹிட் அடித்தது. இந்தப் பாடலின் வரிகள் மற்றும் ஜானகியின் குரல் சிறப்பாக அமைந்திருக்கும்.
"ஊர்கோல மேகங்களே
நீங்க ஒரு நாழி நில்லுங்களேன்
மயிலாடும் கட்டில்
தனியாக அவரை
பார்த்தாதான் சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை
சொல்லுங்களேன்..."
2. செந்தூர பூவே:
கமல்ஹாசன்,ரஜினிகாந்த் மற்றும் ஶ்ரீதேவி நடிப்பில் வெளியான 16 வயதினிலே என்ற திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலிலும் ஜானகியின் குரல் மற்றும் இளையராஜாவின் இசை கேட்பவர்களுக்கு இன்பத்தை தரும் வகையில் அமைந்திருக்கும். அத்துடன் பாடலின் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும்.
"மாலை வரும்
அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும்
பூவை இறைத்திடுங்கள்"
3. புத்தம் புது காலை:
இளையராஜா- ஜானகி கூட்டணியில் அமைந்த காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று. இளையராஜாவின் இசை மற்றும் ஜானகியின் குரல் அவ்வளவு சிறப்பான படத்தின் காட்சிகள் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கும். இப்பாடலின் வரிகளும் நன்றாக இருக்கும்.
"வானில் தோன்றும்
கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசைபாடுது
வலி கூடிடும் சுவைகூடுது..."
4. சின்ன சின்ன வண்ண குயில்:
மணி ரத்னம் இயக்கத்தில் அமைந்த சிறந்த படங்களில் ஒன்று மௌன ராகம். இந்தப் படத்தில் மோகன் மற்றும் ரேவதி நடிப்புடன் சேர்ந்து இளையராஜாவின் இசை படத்தை காலத்திற்கும் அழியாத காவியமாக மாற்றியது. இதில் ஜானகி குரலில் அமைந்த சின்ன சின்ன வண்ண குயில் பாடல் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும்.
"மன்னவன் பேரை
சொல்லி மல்லிகை சூடி
கொண்டேன் மன்மதன்
பாடல் ஒன்று நெஞ்சுக்குள்
பாடி கொண்டேன்
சொல்ல தான்
எண்ணியும் இல்லயே
பாஷைகள் என்னவோ
ஆசைகள் எண்ணத்தின்
ஓசைகள்.."
5. நெஞ்சுனிலே நெஞ்சுனிலே:
ஏஆர் ரஹ்மான் இசையில் ஜானகி பாடிய சிறப்பான பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. இது உயிரே திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலில் ஜானகி அம்மாவின் குரல் மற்றும் ரஹ்மானின் இசை அவ்வளவு சிறப்பாக இருக்கும்.
"ஓரப் பார்வை
வீசுவான் உயிரின் கயிறில்
அவிழ்குமே
செவ்விதழ் வருடும்போது
தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது
உயிரின் ஓசை தொடங்குமே
வான் நிலா நாணுமே முகில்
இழுத்துக் கண் மூடுமே..."
இவை தவிர காற்றின் எந்தன் கீதம், அழகு மலர் ஆட, ஒரு சனம் உள்ளிட்ட பல இனிமையான பாடல்கள் ஜானகி அம்மாவின் குரலில் நாம் எப்போதும் கேட்கும் வகையில் அமைந்திருக்கும்.
மேலும் படிக்க: யுவனின் மனம் மயக்கும் நைட் ப்ளேலிஸ்ட்..!