Parasakthi : பராசக்தி ஓடிடி டீல் முடிந்தது..சிவகார்த்திகேயன் கரியரில் அதிக விலைக்கு விற்பனையான படம் இதுதான்
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்பட ஓடிடி ரிலீஸ் Zee5 நிறுவனத்திற்கு விற்பனையாகியுள்ளது

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி பராசக்தி படம் உருவாகியிருப்பதால் இப்படத்தை வாங்க முன்னணி ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வந்தனர். இப்படியான நிலையில் Zee 5 நிறுவனம் பராசக்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளது
சூர்யா நடிக்க இருந்த புறநாநூறு திரைப்பட கைவிடப்பட்டதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தை இயக்கியுள்ளார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அதர்வா , ஶ்ரீலீலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் 100 ஆவது படமாக இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டான் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது . வரும் ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து பீரியட் டிராமாவாக உருவாகியிருக்கும் பராசக்தி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
பராசக்தி ஓடிடி ரிலீஸ்
இன்னும் ஒரு சில வாரங்களில் பராசக்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை வாங்க முன்னணி ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வந்தன. படம் இந்தி மொழி எதிப்பை மையமாக வைத்து உருவாகியிருப்பதே இதற்கு காரணமாக கூறப்பட்டது. தற்போது Zee 5 நிறுவனம் பராசக்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ளது. பராசக்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை 52 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





















