Cinema Headlines July 17 : 'அமரன்' ரிலீஸ் தேதி முதல் துல்கர் சல்மான் குமுறல் வரை... இன்றைய சினிமா செய்திகள்
Cinema Headlines July 17 : சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியானது. நட்சத்திர நடிகரின் மகன் என அடையாளப்படுத்தப்படும் துல்கர் சல்மான் வரை இன்றைய சினிமா செய்திகள்.
அமரன் ரிலீஸ் தேதி :
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது.
விடுதலை ஃபர்ஸ்ட் லுக் :
கடந்த 2023 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் விடுதலை. விஜய் சேதுபதி , சூரி , சேதன் , உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். விடுதலை முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்படியான நிலையில் விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது. முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்திற்கு குறைவான காட்சிகளே இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவரது காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியரின் இளமைப் பருவ காதல் காட்சியை வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர். விரைவில் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரத்வாஜ் ரங்கன் புது முயற்சி :
சினிமா விமர்சகராக அறியப்படும் பரத்வாஜ் ரங்கன் பிரபல ஊடகங்களில் திரைப்பட விமர்சனங்கள் மற்றும் திரை பிரபலங்களை நேர்காணல் செய்துள்ளார். பல்வேறு இயக்குநர்கள் , நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களை நேர்காணல் செய்துள்ளார். ஒரு படத்தை கதையம்சத்துடன் தொழில்நுட்ப ரீதியாகவும் புரிந்து கொள்ளும் விதமாக இவரது விமர்சனங்கள் இருப்பது தனிச்சிறப்பு. தற்போது அடுத்த பரிணாமமாக பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் புதிய படத்திற்கு திரைக்கதை எழுத இருக்கிறார் என்ற அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா நடித்த ஐரா படத்தை இயக்கிய சர்ஜூன் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.
ஊர்வசி ரவுதெலா வீடியோ லீக் :
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான 'தி லெஜண்ட்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஊர்வசி ரவுதெலா குளியலறையில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது. வெளியான கொஞ்ச நேரத்தில் இந்த வீடியோ வைரலானது. இந்த வீடியோ ஊர்வசிக்கு தெரியாமல் வெளியானதா இல்லை இது அவரது அடுத்த படத்திற்கான ப்ரோமோஷனா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
துல்கர் சல்மான் குமுறல்:
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வருகிறார். ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள துல்கர் சல்மான் மலையாளத்தை தவிர மற்ற மொழி படங்களில் அதிகமாக நடித்து வருவது குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துல்கர் சல்மான் நான் என்ன முயற்சி செய்தாலும் என் அப்பாவின் அடையாளத்தில் இருந்து என்னால் அதை செய்ய முடியவில்லை. ஒரு சிலர் தொடர்ச்சியாக எனக்கு என் தந்தையின் பெயரை சொல்லி எனக்கு முத்திரை குத்துகிறார்கள். மலையாளத்தைக் காட்டிலும் பிற மொழியில் அதிகம் நடிப்பதற்கு காரணம் நான் யாருடைய மகன் என அங்கு நிறைய பேருக்கு தெரிவதில்லை. ஆனால் என்னை நட்சத்திரத்தின் மகன் என முத்திரை குத்துவது கஷ்டமாக இருக்கிறது என்றார்.