மேலும் அறிய

சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு... தனுஷ் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அழைப்பு!

Audition for New faces : சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் 18வது தயாரிப்பாக ஒரு கல்லூரி சார்ந்த திரைப்படத்திற்கு முன்னணி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க புது முகங்களுக்கான ஆடிஷன்.  

Sithara Entertainments : நீங்கள் நடிப்பில் திறமையானவரா? நடிக்க ஆசையா? சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தரும் வாய்ப்பு இதோ...

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான  சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தற்போது ஒரு புதிய போஸ்ட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தனது தயாரிப்பில் உருவாக்கப்பட உள்ள ஒரு புதிய திட்டத்திற்காக புது முகங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஆடிஷன் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு... தனுஷ் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அழைப்பு!

கல்லூரி சார்ந்த திரைப்படம் :

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தனது 18வது தயாரிப்பாக ஒரு கல்லூரி சார்ந்த திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளனர். அதற்கு முன்னணி கதாபாத்திரத்தில் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவும் ஆண்கள் மற்றும் பெண்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். 

ஆடிஷன் தேவையான தகுதி மற்றும் விவரம் :

 18 வயது முதல் 24 வயது வரை உள்ள ஆண்களுக்கும், 16 வயது முதல் 24 வயது வரை உள்ள பெண்களுக்கும் ஒரு ஆடிஷன் பற்றிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளனர். விருப்பமுள்ளவர்கள் தங்களின் ஒரு நிமிட ஆடிஷன் கிளிப்பிங் அடங்கிய பதிவை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் மெயில் ஐடிக்கு (casting@sitaraEnts.com) அல்லது அவர்களின் வாட்ஸஅப் நம்பருக்கு (8801990954) தங்களின் பதிவை அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளனர். விருப்பமுள்ளவர்கள் அனுப்பும் வீடியோ கிளிப்பிங் டிக் டாக் அல்லது ரீல்ஸ் போன்ற வீடியோக்களாக இருப்பின் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். 

ஆடிஷனில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் அனுப்பும் வீடியோ முழுமையாக தங்களின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில்  இருக்க வேண்டும். 1 நிமிட வீடியோ கிளிப்பிங் போதுமானது என்று தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். 

"ஜெர்ஸி" சூப்பர் ஹிட் : 

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் இதுவரையில் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளது. அதில் மிகவும் பிரபலமான திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  "ஜெர்ஸி" திரைப்படம். இப்படத்தில் நடிகர் நானி ஒரு கிரிக்கெட்டராக சந்திக்கும் பிரச்சனைகளை தாண்டி எப்படி வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார் என்பதையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  

தனுஷ் நடிக்கும் "வாத்தி":

மேலும் சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் "வாத்தி" என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் நடிகர் தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனன் நடித்து வருகின்றனர். இப்படம் 2023ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by Sithara Entertainments (@sitharaentertainments)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Canada: கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Gold Rate Hike: உன் ஆட்டத்த நிறுத்தவே மாட்டியா.?! புதிய உச்சத்தை நோக்கி உயரத் தொடங்கிய தங்கம்...
உன் ஆட்டத்த நிறுத்தவே மாட்டியா.?! புதிய உச்சத்தை நோக்கி உயரத் தொடங்கிய தங்கம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Canada: கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Gold Rate Hike: உன் ஆட்டத்த நிறுத்தவே மாட்டியா.?! புதிய உச்சத்தை நோக்கி உயரத் தொடங்கிய தங்கம்...
உன் ஆட்டத்த நிறுத்தவே மாட்டியா.?! புதிய உச்சத்தை நோக்கி உயரத் தொடங்கிய தங்கம்...
Sunita Williams: தரையிறங்கியதுமே பிரச்னை..! 45 நாட்கள், உடலில் இவ்வளவு மாற்றங்களா? சுனிதாவிற்கான சவால்கள்
Sunita Williams: தரையிறங்கியதுமே பிரச்னை..! 45 நாட்கள், உடலில் இவ்வளவு மாற்றங்களா? சுனிதாவிற்கான சவால்கள்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய  சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?
Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?
sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்
sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்
Embed widget