மோகன்லால் நடிப்பில் எம்புரான் - படம் எப்படியிருக்காம்?
பிருத்விராஜ் இயக்கத்தில் மலையாள சினிமா ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள படம் எம்புரான். 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகம் இது.
மோகன்லால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டிக்கெட் முன்பதிவுகளில் மட்டு ஒரு நாளில் 50 கோடிக்கு மேலாக வசூல் சாதனை படைத்துள்ளது எம்புரான் திரைப்படம்.
சர்வதேச கடத்தல் மாஃபியா குரேஷி ஏப்ரகாம் (மோகன்லால்). அவர் சொந்த ஊர் கேரளாவில் மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடி ஏற்படுகையில், அதை எவ்வாறு கையாள்கிறார் என்பதே எம்புரான் படத்தின் கதையாம்.
இந்தப் படத்தின் காட்சி அமைப்புகள் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் உலகதரத்தில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பிருத்விராஜின் இயக்கம், கதாபாத்திரத்தை எலிவேட் செய்யும் அளவுக்கு ஏதும் இல்லாதது..Zero Emotional Connection ஆகியவை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்திருக்கிறது என்கிறார்கள்.
ஹாலிவுட் படங்களின் வழக்கமான கதை சொல்லும் பாணியை இப்படத்தில் அவர் பின்பற்றியிருப்பதாகவும் இதில் தனித்துவமானது என குறிப்பிட்டு சொல்ல எதும் இல்லை என சில ரசிகர்கள் கருதுகிறார்கள்
மோகன்லான் திரைப்படம் என்றாலும் சிலர் நல்லாயிருப்பதாகவும் படம் அந்த அளவுக்கு இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோகன்லால், காட்சி அமைப்புகள் ஆகியவைகளுக்காக இந்தப் படத்தை காணலாம் என சிலர் தெரிவித்துள்ளனர்.
எம்புரான் படத்தில் மோகன்லால் நடித்துள்ள காட்சிகள் மொத்தமே 40 நிமிடம் தான் என படக்குழு முன்பே தெரிவித்திருந்தது.