மேலும் அறிய

Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?

Shalini Ajith : நடிகையும் நடிகர் அஜித் மனைவியுமான ஷாலினிக்கு மைனர் சர்ஜரி நடைபெற்றதால் அஜர்பைஜானில் நடைபெற்ற 'விடாமுயற்சி' ஷூட்டிங்கில் இருந்து சென்னைக்கு விரைந்து திரும்பினார் அஜித்.

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகளில் அனைவரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு மிகவும் பிரபலமான கியூட் ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி. நடிகர் அஜித் எவ்வளவு தான் பிஸியாக தனது சினிமா வாழ்க்கை, பைக் ரேஸ், கார் ரேஸ் என அவரின் கனவை பின்தொடர்ந்து சென்றாலும் ஒரு நாளும் குடும்பத்துக்கான நேரத்தை ஒதுக்க தவறியதே இல்லை. மனைவி ஷாலினி மற்றும் மகன் மகளுடன் அவ்வப்போது வெக்கேஷன் சென்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகும். 

Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?

தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது.  70 சதவீதம் நிறைவடைந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார் அஜித்குமார். 

'விடாமுயற்சி' படப்பிடிப்பில் நிறுத்தப்பட்டது குறித்து பல வதந்திகள் எழுந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தான் மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் துவங்கியது என்ற தகவல் வெளியானது. ஒரு மாதம் காலம் மிகவும் தீவிரமாக படப்பிடிப்பு நடத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் திடீரென நடிகர் அஜித் சென்னை திரும்பி வந்தார். பர்சனல் விஷயத்துக்காக அவர் அவசரமாக சென்னை வந்ததாக சொல்லப்பட்டது. 

Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?

அஜித் 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்ததற்கு அவரின் மனைவி ஷாலினியின் உடல்நிலை தான் காரணம். ஷாலினிக்கு உடல்நலக்குறைவு காரணமாக மைனர் ஆபரேஷன் ஒரு செய்யப்பட்டுள்ளது. அஜித் அஜர்பைஜானுக்கு கிளம்புவதற்கு முன்னரே ஆபரேஷனுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு தான் கிளம்பினார் என்றாலும் மனைவியை பார்ப்பதற்காக சென்னை விரைந்துள்ளார். ஷாலினி அஜித் கையை பிடித்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. #shaliniAjithkumar என்ற ஹேஷ் டேக்குடன் ட்ரெண்டிங்காகி வருகிறது. ஷாலினி இப்போது நலமாக இருக்கிறார் அவருக்கு எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது என்ற தகவல் அறிந்து ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.  
மீண்டும் அஜித் அஜர்பைஜான் சென்று விடாமுயற்சி ஷூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளார். 
  
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
Embed widget