‛நான் 5 மாதம் கர்ப்பம்...’ வித்தியாசமாக விழிப்புணர்வு செய்த நீலிமா ராணி!
நடிகை நீலிமா ராணி கொரோனா தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை மற்றும் திரைப்பட நடிகை என பல பரிமானங்களை கொண்டவர் நீலிமா ராணி. இவர் தமிழில் சிறிய வயது முதல் திரைப்படங்களில் கலக்கி வருகிறார். நான் மகான் அல்ல திரைப்படம், மெட்டி ஒலி சீரியல் போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் தற்போது நீல்ஸ் என்ற யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகிறார். அதில் அவ்வப்போது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். அத்துடன் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நீலிமா ராணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், "நான் தற்போது ஐந்த மாதங்கள் கர்ப்பமாக உள்ளேன். முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. ஆனால் என்னுடைய மகப்பேறு மருத்துவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவருடைய அறிவுரைக்கு ஏற்ப நான் இன்று என்னுடைய முதல் தவணை கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டேன். ஆகவே இதுபோன்று கருதறித்து உள்ள தாய்மார்கள் அவசியம் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். அது நமக்கும் குழந்தைக்கும் நிச்சயம் பாதுகாப்பான ஒன்று" எனக் கூறியுள்ளார்.
View this post on Instagram
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கர்ப்பிணி பெண்களை மத்திய மாநில அரசுகள் தற்போது வலியுறுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நடிகை நீலிமா ராணி தன்னுடைய பங்கிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக நீலிமா, தனது திருமண நாளை முன்னிட்டு இன்ஸ்டாவில் தனது குடும்பத்துடன் இருக்கம் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதோடு மட்டுமின்றி நாங்கள் வரும் ஜனவரியில் நாங்கள் நால்வராக போகிறோம். 20 வாரங்கள் முடிந்துவிட்டது! இன்னும் 20 போக வேண்டும் !!! எங்களுக்கு மகிழ்ச்சி! ” என ரொம்ப க்யூட்டாக இரண்டாவது குழந்தையின் வரவை பகிர்ந்து இருந்தார். இந்தச் சூழலில் தற்போது தடுப்பூசி செலுத்தி கொண்டு ஒரு விழிப்புணர்வு வீடியோவை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:புதிய சொகுசு கார் வாங்கிய நடிகர் தாடி பாலாஜி- வைரலான படம் !