மேலும் அறிய

NaaneVaruvean: ‛சோழர்களுடன் மோதும் ராஜா’ நானே வருவேன் ரிலீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடித்துள்ள  ‘நானே வருவேன்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனுஷ் நடித்துள்ள  ‘நானே வருவேன்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்துள்ளதால் இந்தப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்தப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளதாக தெரிகிறது.  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ள நிலையில், படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஜூலை 13 ஆம் தேதி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிய நிலையில், ஜூலை 27 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளையொட்டி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

அதனைத்தொடர்ந்து  படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலாக  “ வீரா சூரா” பாடல் வெளியானது.

 

                                 

செல்வராகவன் எழுதியிருந்த இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து  'நானே வருவேன்' திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.  அதனைத்தொடர்ந்து படத்தில் இருந்து டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

 

                                   

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் செப் 30  அன்று வெளியாக இருப்பதால், அதற்கு போட்டியாக  ‘நானே வருவேன்’ படம் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், தனுஷ் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகவே இருந்தது. இருப்பினும் அது குறித்தான  அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. 

 

இந்த நிலையில் ‘நானே வருவேன்’ திரைப்படம்  ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு போட்டியாக அன்றைய தினமே வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில்  ‘நானே வருவேன்’ திரைப்படம் ஒரு நாள் முன்னதாக செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget