மேலும் அறிய

Sarathkumar Clarifies: ஊக்குவிப்பதற்காக சொன்னதை எல்லாம் சர்ச்சையாக்குனா எப்படி? - சூப்பர் ஸ்டார் குறித்து சரத்குமார்!

வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் அனைவருமே என்றுமே சூப்பர் ஸ்டார்கள் தான். யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சைக்கு விளக்கமளித்த சரத்குமார்

பொங்கலுக்கு வெளியாக தயாராக இருக்கும் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் மிகவும் பிரமாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட இந்த விழாவில் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சரத்குமாரும் கலந்து கொண்டார். அந்த விழாவில் நடிகர் சரத்குமார் நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து பல விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வந்தது. அந்த விமர்சனங்களுக்கு தற்போது பதிலளித்துள்ளார் நடிகர் சரத்குமார். 

 

Sarathkumar Clarifies: ஊக்குவிப்பதற்காக சொன்னதை எல்லாம் சர்ச்சையாக்குனா எப்படி? - சூப்பர் ஸ்டார் குறித்து சரத்குமார்!

டஃப் கொடுக்கும் ரஜினிகாந்த் :

சமீப காலமாக தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு விவகாரம் யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? என்ற கேள்வி. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை இத்தனை ஆண்டுகளாக தக்கவைத்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது 70 வயதிலும் இன்றைய தலைமுறை ஹீரோக்களுக்கு நிகரான ஒரு ஹீரோவாக கெத்து காட்டிவருகிறார். வசூலிலும் டஃப் கொடுத்து வரும் ரஜினிகாந்தின் சாதனைகளை முறியடிக்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற சர்ச்சையை ஏற்படுத்தும் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கருத்துக்கள் தேவையற்றது என திரை விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

 

 

சரத்குமாரின் சர்ச்சைக்குரிய பேச்சு :

இந்த நிலையில் வாரிசு படத்தின் இதை வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசுகையில் சூர்யவம்சம் திரைப்படத்தின் வெற்றி விழா சமயத்திலேயே விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறியதற்கு பலரும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். ரஜினி முன்னால் சூப்பர் ஸ்டார் என்றால் விஜய் தற்போதய சூப்பர் ஸ்டார் என சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் சரத்குமார் தெளிவு படுத்தினார். 

 

 

ஊக்குவிக்க கூறினேன் :

சூர்யவம்சம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என கூறியதையே தான் வாரிசு பட விழாவிலும் கூறினேன். ஆனால் அதற்கு அர்த்தம் ரஜினிகாந்த் தற்போதைய சூப்பர் ஸ்டார் இல்லை விஜய் தான் என்பது இல்லை. அதே போல அஜித்குமாரும் சூப்பர் ஸ்டார் இல்லை என நான் குறிப்பிடவில்லை. எப்படி அமிதாப் பச்சன் ஒரு சூப்பர் ஸ்டாரோ அதே போல ஷாருக்கானும் ஒரு சூப்பர் ஸ்டார் தான். அதே போல இவர் தான் அவர் தான் என நான் குறிப்பிடவில்லை. வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் அனைவருமே என்றுமே சூப்பர் ஸ்டார்கள் தான். அவர்களை ஊக்குவிப்பதற்காக தான் அப்படி குறிப்பிட்டேன் எனக் கூறினார் சரத்குமார். 

 

தலைப்பு செய்திகள்

Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Embed widget