மேலும் அறிய

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

முன்னணி நட்சத்திரமான ஆர். சரத்குமாரின் பிறந்தநாளான இன்று (ஜூலை 14, 2026), அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான காவ்யா ஃபிலிம் கம்பனி (Kavya Film Company), தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தலைமையில் தமிழ் திரையுலகில் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பை அறிவித்துள்ளது.

முன்னணி நட்சத்திரமான ஆர். சரத்குமாரின் பிறந்தநாளான இன்று (ஜூலை 14, 2026), அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தற்காலிகமாக “புரொடக்ஷன் நம்பர் 12” (Production No. 12) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய தமிழ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பனி மற்றும் சரத்குமார் இணையும் முதல் படம் இது என்பதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான 'கிங்ஸ்டன்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். தனித்துவமான திரைக்கதை அமைப்பிலும், புத்தாக்கமான இயக்கத்திலும் பெயர் பெற்ற இவர், நடிகர் சரத்குமாரை இதுவரை பார்த்திராத ஒரு மாறுபட்ட மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் காட்டவுள்ளார்.

தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி பகிர்ந்து கொண்டதாவது "சரத்குமார் சார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எங்களது அடுத்த தமிழ் படத்தை அறிவிப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். பல தலைமுறைகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து வரும் அவரது நடிப்புத் திறமையும் பன்முகத்தன்மையும் திரைத்துறையினருக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பவை.

ஒரு வலுவான கதையும், அர்ப்பணிப்புடன் கூடிய படக்குழுவும் இணைந்திருக்கும் இத்திரைப்படத்திற்கு சரத்குமார் சாரின் வருகை கூடுதல் பலமாக இருக்கும். இயக்குநர் கமல் பிரகாஷ் இந்த கதையை மிகத் தெளிவோடும் நம்பிக்கையோடும் அணுகியுள்ளார். ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்,"‌என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் தொடங்கவுள்ளது. முழு படப்பிடிப்பையும் நவம்பர் 2026-க்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இத்திரைப்படம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி மற்றும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர் படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் மாதங்களில் ஒவ்வொன்றாக வெளியிடப்படும். நம்பிக்கை தரும் தயாரிப்பு நிறுவனம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமார் மற்றும் திறமைமிக்க இயக்குநர் கமல் பிரகாஷ் இணையும் இந்த ‘புரொடக்ஷன் நம்பர் 12’ திரைப்படம் ஒரு சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Embed widget