மேலும் அறிய

Sandeep Singh: ‘நான் படமே எடுக்கல.. என்னை விட்ருங்க ப்ளீஸ்’ .. திப்பு சுல்தான் பற்றி படம் எடுக்கவிருந்த தயாரிப்பாளர் கதறல்..

திப்பு சுல்தான் பற்றி எடுக்கவிருந்த படத்தை கைவிடுவதாக பிரபல தயாரிப்பாளர்  சந்தீப் சிங் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திப்பு சுல்தான் பற்றி எடுக்கவிருந்த படத்தை கைவிடுவதாக பிரபல தயாரிப்பாளர்  சந்தீப் சிங் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக இந்திய திரையுலகைச் சேர்ந்தவர்களிடம் கேட்டால், இங்கு படைப்பு சுதந்திரம் இல்லை என சொல்வார்கள். எதையாவது பற்றி படம் எடுத்தால் மிரட்டல் வருவது வாடிக்கையாகி விட்டது. அதிலும் ஏதாவது தலைவர்கள், சமூகம், மதம் பற்றிய படங்கள் என்றால் சொல்லவா வேண்டும். வரலாற்றை மாற்றி விட்டார்கள், தவறான கருத்தை தெரிவிக்கிறார்கள் என ஒரு கும்பல் கிளம்பி விடும். உண்மையில் வரலாறு தவறாக சித்தரிக்கப்படுவதை சொல்வதை காட்டிலும், பப்ளிசிட்டிக்காக சிலர் செய்வது ஒட்டுமொத்தமாக படத்தை விமர்சனம் செய்பவர்கள் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. 

இப்படியான நிலையில் 'பிஎம் நரேந்திர மோடி', 'சர்ப்ஜித்'  உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் சந்தீப் சிங். இவர் அடுத்ததாக மன்னர் திப்பு சுல்தானின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக கடந்த மே மாதம் அறிவித்தார். இதற்கான முன்னோட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இன்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் திப்பு சுல்தான் தொடர்பான படத்தை கைவிடுவதாக தெரிவித்தார். 

அந்த அறிக்கை, ஹஸ்ரத் திப்பு சுல்தான் பற்றிய படம் எடுக்கப்படாது என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது. மேலும் அதில், எனது குடும்பம், நண்பர்கள் மற்றும்  என்னை அச்சுறுத்துவதையோ அல்லது தவறாக பேசுவதையோ தவிர்க்குமாறு எனது சக சகோதர சகோதரிகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நான் வேண்டுமென்றே யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எல்லா நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறவன் நான். அதனால் உங்கள் உணர்வுகளை புண்படுத்துவது என் நோக்கமில்லை. இந்தியர்களாகிய நாம் என்றென்றும் ஒன்றுபடுவோம், எப்போதும் ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுப்போம்!’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

முன்னதாக திப்பு சுல்தான் படத்தின் அறிவிப்பு நிகழ்வில் பேசிய சந்தீப் சிங், ‘திப்பு சுல்தானின் உண்மை நிலையை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பிரதமர் நரேந்திர மோடி,  வீர சாவர்க்கர், அடல் அல்லது பால் சிவாஜி போன்ற எனது தயாரிப்பிலான படங்கள் எப்போதும் உண்மைக்கு ஆதரவாக நிற்கின்றன. நேர்மையாக சொல்கிறேன், அவர் ஒரு சுல்தான் என்று அழைக்கப்படுவதற்கு கூட தகுதியற்றவர். வரலாறு பாடப்புத்தகங்களில் காட்டப்பட்டுள்ளபடி அவரை ஒரு துணிச்சலானவர் என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் அவரது தீய பக்கம் யாருக்கும் தெரியாது. எதிர்கால சந்ததிக்கு அவருடைய இருண்ட பக்கத்தை நான் வெளிப்படுத்த விரும்புகிறேன்’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget