மேலும் அறிய

2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?

இந்தியாவில் அடுத்த 6 மாதத்திற்குள் அறிமுகமாக உள்ள ஸ்கூட்டர்கள் மற்றும் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  குறிப்பாக ஸ்கூட்டர்களை அதிகம் விரும்புகின்றனர். இ ஸ்கூட்டர்கள், பெட்ரோலில் ஓடும் ஸ்கூட்டர்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது.

இந்தியாவில் இந்தாண்டு அறிமுகமாக உள்ள ஸ்கூட்டர்கள், இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் விலை என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. TVS Jupiter Electric:

டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற ஸ்கூட்டர்களில் ஒன்று TVS Jupiter. இந்த ஸ்கூட்டரின் மின்சார வேரியண்டாக சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ளது TVS Jupiter Electric. இந்த இ ஸ்கூட்டர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த இ ஸ்கூட்டர் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.

2. Ather EL Scooter:

ஏதர் நிறுவனம் இந்தியாவின் புகழ்பெற்ற இ ஸ்கூட்டர் நிறுவனம் ஆகும். ஏதர் நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. ஏதரின் Ather EL Scooter ஸ்கூட்டர் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூபாய் 90 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் ஆகும். இந்த இ ஸ்கூட்டர் அறிமுகமானால் மிகப்பெரிய வளர்ச்சியை ஏதர் நிறுவனம் சந்திக்கும்.

3. Honda Activa 7G:

ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டர் Honda Activa. இந்த ஸ்கூட்டரின் 7ம் தலைமுறை மாடலானHonda Activa 7G ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த Honda Activa 7G
ஸ்கூட்டர் அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் 80 ஆயிரம் முதல் ரூபாய் 90 ஆயிரம் வரை இதன் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. Honda QC3:

ஹோண்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்களின் மின்சார ஸ்கூட்டர் Honda QC3- மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்த இ ஸ்கூட்டர் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் வரை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

5. Honda ADV 160:

ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கூட்டர் Honda ADV 160. இந்த ஸ்கூட்டர் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

6. TVS Jupiter CNG:

டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டர் TVS Jupiter. இந்த ஸ்கூட்டர் பெட்ரோல் வேரியண்டில் மட்டுமே உள்ள நிலையில், இந்த TVS Jupiter சிஎன்ஜியில் இயங்கும் வகையில் விரைவில் அறிமுகமாக உள்ளது. டிசம்பர் மாதம் இது அறிமுகமாக உள்ளது. இதன் விலை ரூபாய் 90 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.

7. Suzuki Burgman Street Electric:

சுசுகி நிறுவனத்தின் புகழ்பெற்ற இ ஸ்கூட்டர் Suzuki Burgman Street. இந்த ஸ்கூட்டரின் மின்சார வேரியண்டாக Suzuki Burgman Street Electric வரும் டிசம்பர் மாதம் அறிமுகமாக உள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டர் டிசம்பர் மாதம் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.

8.Yamaha Nmax 155:

யமஹா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு உள்ளது. யமஹா நிறுவனத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ஸ்கூட்டர் Yamaha Nmax 155. இது டிசம்பர் மாதம் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.

9. Simple Energy Arrive:

இந்தியாவின் பிரபலமான இ ஸ்கூட்டர் நிறுவனம் Simple Energy. இவர்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள இ ஸ்கூட்டர் Simple Energy Arrive. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. டிசம்பர் மாதம் இந்த இ ஸ்கூட்டர் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.

10. Vinfast Vero X:

வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போகும்  இ ஸ்கூட்டர் Vinfast Vero X. வின்ஃபாஸ்ட்டின் இந்த Vinfast Vero X இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சம் முதல் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இது டிசம்பர் மாதம் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
டகால்டி காட்டாத Ducati பைக்.. இருக்கதுலே இதுதான் விலை கம்மி - எவ்ளோ? என்ன வண்டி?
டகால்டி காட்டாத Ducati பைக்.. இருக்கதுலே இதுதான் விலை கம்மி - எவ்ளோ? என்ன வண்டி?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget