Watch Video | ஆன்மீகம், ஓவியம், எண்ணமெல்லாம் வண்ணமம்மா.! நிறங்களை குழைத்து ஓவியம் தீட்டும் சமந்தா! வைரல் வீடியோ
இப்போது ஓவியம் வரைந்து தன் நேரத்தை செலவழித்து வருகிறார் சமந்தா.
நாக சைதன்யா பிரிவுக்குப் பிறகு, நண்பர்களுடன் நேரம் செலவழித்து வரும் சமந்தா தனக்கு பிடித்த வேலைகளை செய்து வருகிறார். ஆன்மீக பயணம், யோகா, இயற்கையோடு நேரம் செலவழித்தல் போன்ற தனக்கு பிடித்தமான பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில் இப்போது ஓவியம் வரைந்து தன் நேரத்தை செலவழித்து வருகிறார் சமந்தா. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மிகப்பெரிய போர்டில் பல வண்ணங்களை குழத்து ஓவியம் வரைந்து மகிழ்கிறார் சமந்தா.
View this post on Instagram
முன்னதாக, கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் ரோசியேட் கங்கா என்னும் ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார் சமந்தா. அப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கும் சமந்தா, ரிஷிகேஷில் இருக்கும் மஹரிஷி மஹேஷ் யோகி ஆசிரமத்துக்கு தான் வந்திருப்பதாகவும், இது தனது குழந்தைப்பருவ நினைவுகளை கொடுப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.
Beatles என்னும் இசை ஆல்பம் இங்குதான் தயாரிக்கப்பட்டது. இங்கு நிற்பது சந்தோஷமாக இருக்கிறது. இங்குதான் 'Transcendental Meditation' என்னும் தியானத்தையும் இங்குதான் செய்தார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார் சமந்தா. அது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு இருந்தார்.
#SamanthaRuthPrabhu @Samanthaprabhu2
— Ansuman (@lifeansuman) October 26, 2021
painting love 🖌️🎨❤️ #samantha pic.twitter.com/NgUEfUeAWW
மேலும் அவர் பகிர்ந்திருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ”1976-78 காலங்களில் பிரம்மச்சாரினிகளும், சந்நியாசிகளும் இங்குதான் சாதனை செய்தார்கள் என்றும், உலகப்புகழ்பெற்ற பீட்டில்ஸ் ஆல்பம் இங்குதான் படைக்கப்பட்டது” என்றும், தனக்கு இதையெல்லாம் பார்த்தால் சின்ன வயது ஞாபகங்கள் வருவதாகவும் போஸ்ட் செய்திருந்தார் சமந்தா.
View this post on Instagram
View this post on Instagram