மேலும் அறிய

Samantha: ஷூட்டிங் ஸ்பாட்டிலே மயங்கி விழுந்த சமந்தா! சிட்டாடல் படப்பிடிப்பில் என்னதான் நடந்துச்சு?

Samantha: பாட்காஸ்ட் மூலம் தன்னுடைய உள் நலம் பற்றி பேசி வரும் சமந்தா, இந்த வாரம் வெளியான பாட்காஸ்டில் ஷூட்டிங் ஸ்பாட்டில் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பற்றி சொல்லி ஷாக் கொடுத்தார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. மிகவும் பிஸியாக படங்களில் நடித்து வந்த நடிகை சமந்தா திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு தான் மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோய் பாதிப்பினால் அவதிப்படுவதாகவும் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார். திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமந்தா விரைவில் நலம் பெற்று திரும்ப வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். 

Samantha: ஷூட்டிங் ஸ்பாட்டிலே மயங்கி விழுந்த சமந்தா! சிட்டாடல் படப்பிடிப்பில் என்னதான் நடந்துச்சு?

பாட்காஸ்டில் மனம் திறக்கும் சமந்தா:

தொடர் சிகிச்சை மற்றும் ஓய்வுக்கு பிறகு மீண்டும் சாகுந்தலம் மற்றும் குஷி படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக ஈடுபட்டு இருந்தார் சமந்தா. அதனை தொடர்ந்து 'சிட்டாடல்' இணைய தொடரின் இந்திய பதிப்பில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த இணைய தொடர் விரைவில் அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது. 

இடையில் சில மாதங்கள் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட சமந்தா தன்னுடைய உடல் ஆரோக்கியம் குறித்து பாட்காஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தனது நண்பரும் ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷுடன் உரையாடி வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் வெளியான பாட்காஸ்டில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்தது பற்றி பேசி இருந்தார். இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 

Samantha: ஷூட்டிங் ஸ்பாட்டிலே மயங்கி விழுந்த சமந்தா! சிட்டாடல் படப்பிடிப்பில் என்னதான் நடந்துச்சு?

ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கிய சமந்தா:

'சிட்டாடல்' வெப் சீரிஸில்  ஏரளாமான ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கு சமந்தாவின் உடல்நிலை ஒத்துக்கொள்ளாததால் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வலி அதிகமாக மயக்கம் போட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே விழுதுள்ளார். பின்னர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாட்காஸ்டில் தெரிவித்து இருந்தார் சமந்தா. மேலும் சிட்டாடல் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளேன் என நம்புகிறேன் என தெரிவித்து இருந்தார் சமந்தா. 

பிரேக் எடுத்து கொண்ட பிறகு மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதை விளம்பரங்களில் இருந்து துவங்கியுள்ளார். பல விளம்பரங்களில் நடித்துள்ள சமந்தா நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து தங்க நகைக்கடன் விளம்பரம் ஒன்றில் மலையாளத்தில் நடித்துள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

மயோசிட்டிஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தது தொடர்ந்து உடனே படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். தன்னால் கடுமையான ஆக்ஷன் காட்சிகளில் ஈடுபட முடியாது என தெரிந்தும் டூப் போடாமல் அவரே சிட்டாடல் படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளது அவரின் துணிச்சலையும் தைரியத்தை காட்டுகிறது என பாராட்டி வருகிறார்கள் சமந்தா ரசிகர்கள். 

விரைவில் சினிமாவில் ரீ என்று கொடுக்க இருக்கும் சமந்தா துணிச்சலான கதாபாத்திரமாக தேர்வு செய்து நடிக்கவே விருப்பப்படுகிறாராம்.  
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Embed widget