மேலும் அறிய
Advertisement
HBD Samantha : தடைகளை தாண்டி எழுந்து வா சிங்கப்பெண்ணே ! சாம் ஸ்வீட்டி ஹேப்பி பர்த்டே !
கியூட் நடிகை சமந்தா இன்று தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடுமையான பாதையை கடந்து வந்த சமந்தாவிற்கு இனி எல்லாம் சுகமாக அமைய வாழ்த்துக்கள்!
தென்னிந்திய சினிமாவின் ஸ்வீட்டியாக வலம் வரும் நடிகை சமந்தா சினிமாவில் நுழைந்து 13 ஆண்டுகளை கடந்த பின்பும் அதே செல்லா குட்டியாகவே இருப்பது அவரின் சிறப்பு. அவரின் கியூட் சிரிப்பு, அழகான முகம், குழந்தை மனம், குறும்பு தனமான செய்கையால் லட்சக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இந்த அழகிய நிலா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
பர்சனல் லைஃப் :
சமந்தா அறிமுகமான 'மாஸ்கோவின் காவேரி' முதல் 'சாகுந்தலம்' வரை அவரின் கேரியர் கிராப் சொல்லும் அவரின் வளர்ச்சி எப்படி பட்டதென்று. சினிமா கேரியர், திருமண வாழ்க்கை என சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்த அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சறுக்கலாக அமைந்தது காதல் கணவர் நாக சைதன்யா உடனான விவாகரத்து. இருவரும் திருமண பந்தத்தில் இருந்து மட்டுமே விலகினாலும் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு தொடரும் என்று உறுதி கொண்டனர்.
மயோசிடிஸ் பாதிப்பு:
விவாகரத்திற்கு பின்பும் சுமூகமாக சென்ற சமந்தாவின் வாழ்க்கையில் கடந்த ஆண்டு பூகம்பமாக வந்தது அறிய வகை பாதிப்பான மயோசிடிஸ் நோய் பாதிப்பு. பல போராட்டங்களுக்கு பிறகு அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளார் சமந்தா. இந்த பிரேக் அவரை மனதளவில் உறுதியாகியுள்ளது. மீண்டும் தனது கேரியரில் கவனம் செலுத்த துவங்கிய சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் 'சாகுந்தலம்' திரைப்படம் வெளியானது. பெரிய எதிர்பாப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ஒரு மோசமான தோல்வியை சந்தித்தது. சமந்தாவின் திரைப்பயணத்தில் இது படு தோல்வி படமாக கருதப்படுகிறது. அனைத்து படங்களுமே வெற்றி பெற வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம். அதனால் இந்த தோல்வியை பற்றி எண்ணாமல் அவரின் வெற்றி படங்களை மனதில் வைத்து எழுந்து வா என அவரின் ரசிகர்கள் ஊக்கமளித்து வருகிறார்கள்.
சமந்தாவின் அடுத்த ஷெட்யூல் :
ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகிவரும் 'சிட்டாடல்' இணைய தொடரின் இந்திய பதிப்பில் நடிகர் வருண் தவான் ஜோடியாக நடிகை சமந்தா நடித்து வருகிறார். மேலும் நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கில் உருவாக்கபட்டு பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும். இந்த ஆண்டு இறுதியில் இருந்து ரிலீஸாக உள்ளது.
பெப்ஸி விளம்பரம் :
நடிகை சமந்தாவிற்கு இந்த பிறந்தநாள் நல்ல ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், மன நிம்மதியையும் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகிறார்கள். அவரின் பிறந்தநாளை மேலும் ஸ்பெஷலாக்கும் வகையில் மிகவும் பிரபலமான பெப்ஸி நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் பல கெட்டப்புகளில் ஸ்டைலிஷாக சமந்தா தோன்றும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த விளம்பரம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
சமந்தாவுக்கு கோயில்:
சமந்தாவின் தீவிரமான ரசிகர் ஒருவர் அவருக்காக தனது வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி அங்கு சமந்தாவின் உருவச்சிலை ஒன்றை வைத்து கோயில் கட்டியுள்ளார். சமந்தாவின் பிறந்தநாளான இன்று தான் அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த ஆண்டு சமந்தாவிற்கு ஒரு சிறப்பான ஆரம்பமாக அமைந்துள்ளது. ஹேப்பி பர்த்டே சாம் !!!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion