Watch Video : சட்டையை கழட்டிய சல்மான்... மிரண்டுபோன ரசிகர்கள்.. டிரெய்லர் விழாவில் என்ன ஆச்சு?
'கிசி கா பாய் கிசி கி ஜான்' டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சட்டையை கழட்டி ரசிகர்களை மிரட்டிய சல்மான்கான் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
![Watch Video : சட்டையை கழட்டிய சல்மான்... மிரண்டுபோன ரசிகர்கள்.. டிரெய்லர் விழாவில் என்ன ஆச்சு? Salman khan showing six packs directly to audience goes viral in social media Watch Video : சட்டையை கழட்டிய சல்மான்... மிரண்டுபோன ரசிகர்கள்.. டிரெய்லர் விழாவில் என்ன ஆச்சு?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/12/47a9a0c7986ee9fae0bb8773bc0264d21681280972670224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இயக்குநர் சிறுத்தை சிவா - நடிகர் அஜித் கூட்டணியில் உருவான வேதாளம், வீரம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என நான்கு திரைப்படங்கள் தமிழில் வெளியாகின. அதில் விவேகம் திரைப்படம் மட்டுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் மற்ற மூன்று திரைப்படங்களும் வெற்றி படங்களாக அமைந்தன.
தமிழில் வெற்றி பெற்ற அப்படங்கள் மற்ற மொழிகளிலும் ரீ மேக் செய்யப்பட்டது. அந்த வகையில் வேதாளம் திரைப்படம் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் 'போலா ஷங்கர்' என்ற பெயரில் சமீபத்தில் ரீ மேக் செய்யப்பட்டு வெளியானது. அதை தொடர்ந்து விஸ்வாசம் படத்தின் ரீமேக்கிலும் சிரஞ்சீவி நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்தியில் ரீ மேக் செய்யப்பட்ட வீரம் :
அஜித் - தமன்னா நடிப்பில் 2014-ஆம் வெளியான 'வீரம்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே தெலுங்கில், 'கட்டமராயுடு' என்ற பெயரில் பவன் கல்யாண் நடிப்பிலும், கன்னடத்தில் 'ஒடியா' என்ற பெயரில் தர்ஷன் நடிப்பிலும் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது அதன் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார். 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சல்மான் கான் உடன் இணைந்து நடித்துள்ளனர் பூஜா ஹெக்டே, ஜகபதி பாபு, பூமிகா சாவ்லா, மாளவிகா சர்மா, வினாலி பட், சித்தார்த் நிகம், ராகவ் ஜுயல் மற்றும் பலர். வரும் ஏப்ரல் 21ம் வெளியாக இருக்கும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. புரமோஷன் நடைபெற்ற மேடையில் சல்மான்கான் செய்ய ஒரு காரியம் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.
கடுமையான விமர்சனங்கள் :
இப்படத்தின் 'என்டம்மா' பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் சல்மான் கான், ராம் சரண் மற்றும் வெங்கடேஷ் மூவரும் இணைந்து வேஷ்டி சட்டையில் நடனமாடி இருந்தனர். இந்த பாடல் தமிழ் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது என பல தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி சல்மான் கான் சிக்ஸ் பேக் உண்மையானது அல்ல என்றும் அது கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சர்ச்சைகள் எழுந்தன.
That’s confidence level and proving haters wrong. No VFX sheer body building ❤️❤️. #SalmanKhan𓃵 #KisiKaBhaiKisiKiJaan #KisiKaBhaiKisiKiJaanTrailer
— Being Abhi (@Being_Abhi_23) April 10, 2023
pic.twitter.com/aogOzplZqX
மேடையை அதிரவைத்த சல்மான் :
படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா சமீபத்தில் நடைபெற்றதில் சல்மான்கான், பூஜா ஹெக்டே மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அந்த மேடையில் நடிகர் சல்மான் கான் தனது சட்டையை கழட்டி உண்மையான சிக்ஸ் பேக்கை காட்டியதை பார்த்த ரசிகர்கள் மிரண்டு விட்டனர். அவரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)