Bharathi Kannamma Roshini Haripriyan : வேற மாரி வேற மாரி.. ரோஷ்னி ஹரிப்ரியனின் ஹாட் ஸ்டெப்ஸ்.. வைரலாகும் பழைய கண்ணம்மா..
Bharathi Kannamma Roshini Haripriyan : ரோஷினி குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சின்னத்திரை பிரபலங்களில் இவரும் ஒருவர்.

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கண்ணம்மா ரோஷினியின் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் வலம் வந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். தனது எதார்த்த நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த கண்ணம்மா, சீரியலில் அவரது பிரசவ நேரத்தில் கணவருடன் சண்டையிட்டு கையில் பையோடு சென்னையையே சுற்றுவது போன்ற எபிசோட்டுகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததோடு, சோசியல் மீடியாவில் இதனைக் கலாய்த்து விட்டனர் நெட்டிசன்கள். இது ஒருபுறம் இருந்தாலும் பெண்கள், வயதானவர்கள் என தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய ரோஷினி தீடிரென சீரியலில் இருந்து விலகியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதற்கடுத்து கண்ணம்மா கேரக்டருக்கு யாரைப்போட்டாலும் எப்படி சீரியல் மக்களிடம் பிரபலமாகப்போகிறதோ என்று அனைவரும் யோசித்த நிலையில்தான், ரோஷ்னியைப்போன்றே வேறொரு பெண்ணைத் தேர்வு செய்துள்ளனர்.
முன்னதாக இச்சீரியலிலிருந்து வெளியேறிய ரோஷினிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதாக வதந்திகள் எழுந்தது. ஆனால் இவர் குக் வித் கோமாளி சீசன் 3 ஒரு போட்டியாளராக களம் இறங்கினார் ரோஷினி. சீரியலுக்கு முடக்குப்போட்ட இவர் ரியாலிட்டி ஷோவின் மூலம் விஜய் டிவியில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதிலும் அவரது செய்யும் சமையல் மற்றும் கோமாளிகளுடன் நடிக்கும் லூட்டிகளைக் காண்பதற்கே ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதோடு மற்ற போட்டியாளர்களுக்கும் கொஞ்சம் டஃப் கொடுத்துவருகிறார்.
குக் வித் கோமாளி
ரோஷினி குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சின்னத்திரை பிரபலங்களில் இவரும் ஒருவர். தான் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவரும் இவர், சமீபத்தில் டிவிட்டரில் பதிவிட்ட வீடியோ ஒன்று தான் தற்போது வைரலாகிவருகிறது.
Naanga Vera Vera VERA-MARI kondaduvom 🤩🥳 Geared up for the jam packed #ValimaiFDFS tomorrow with all excitement!💕🙌 #AjithKumar #Valimai https://t.co/1nhdiWhi8U pic.twitter.com/j2mi6Cow4k
— Roshini Haripriyan (@RoshiniOfficiaI) February 23, 2022
தல அஜித் நடிப்பில் நேற்று உலகெங்கும் வெளியான வலிமை படத்தில் இடம்பெற்றுளள் “நாங்க வேற மாரி, நாங்க வேற மாரி என்று தொடங்கும் அந்த பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ தான் வைரலானதோடு, ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோடு இந்த வீடியோவிற்கு லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் குவிந்துவருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

