மேலும் அறிய

Rocky Aur Rani Kii Prem Kahaani: மீண்டும் பழைய ஃபார்முலாவுடன் களமிறங்கும் கரண் ஜோஹர்... ஜோடி சேர்ந்த ரன்வீர் சிங் - அலியா பட்!

பாலிவுட்டின் ட்ரேட்மார்க் காதல் மற்றும் குடும்பப் படங்களுக்கு பெயர்போன இயக்குநர் கரண் ஜோஹர், இப்படத்திலும் அதையே செய்துள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக டீசரை ஷேர் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

நடிகர் ரன்வீர் சிங், நடிகை அலியா பட் நடிப்பில் கரண் ஜோஹர் இயக்கியுள்ள ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’ (Rocky Aur Rani Kii Prem Kahaani) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கரண் ஜோஹர் படம்

நடிகர் ஷாருக்கான் நடித்த ‘குச் குச் ஹோத்தா ஹே’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராகக் கால் பதித்த கரண் ஜோஹர், பாலிவுட்டின் தவிர்க்க முடியாத பிரபலங்களில் ஒருவராக தற்போது உருவெடுத்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகக் கலைஞராகவும் உருவெடுத்துள்ள கரண் ஜோஹர், தற்போது  ரன்வீர் சிங் - நடிகை அலியா பட்டை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’.

இறுதியாக நடிகர் ரன்பீர் கபூர் நடித்த ‘ஏ தில் ஹே முஷ்கில்’ திரைப்படத்துக்குப் பிறகு கரண் ஜோஹர் தற்போது மீண்டும் இந்த முழு நீள திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

மேலும் இதனிடையே பிரபல ஆந்தாலஜி வெப் சீரிஸ்களான லஸ்ட் ஸ்டோரிஸ், கோஸ்ட் சீரிஸ் ஆகியவற்றில் தானும் இணைந்து இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப் படம் குறித்து கடந்த 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

பாலிவுட் ட்ரேட்மார்க் படம்

பாலிவுட் தாண்டியும் ரசிகர்களைப் பெற்றுள்ள ரன்வீர் சிங் - அலியா பட் இருவரும் இப்படத்தின் இணைந்த நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.

மேலும், பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா, நடிகை ஜெயா பச்சன், ஷப்னம் ஆஸ்மி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ப்ரித்தம் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. பாலிவுட்டின் ட்ரேட்மார்க் காதல் மற்றும் குடும்பப் படங்களுக்கு பெயர்போன இயக்குநர் கரண் ஜோஹர், இப்படத்திலும் அதையே செய்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் உற்சாகமாக டீசரை ஷேர் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

 

மேலும் ஷாருக்கான், அமிதாப் பச்சன், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்டோர் நடித்த பிரபல பாலிவுட் குடும்பப் படமான  ‘கபி குஷி கபி கம்’ படத்தை நினைவுபடுத்தும் வகையில், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம், குடும்ப செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்து இந்த டீசர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கரண் ஜோஹர் தன் பழைய ஃபார்முலாவுடன் களமிறங்கி சூப்பர் ஹிட் படம் தரப்போகிறார் என ஆரூடம் சொல்லி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்!

முன்னதாக நடிகை அலியா பட் ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்தது. ஒண்டர் வுமன் புகழ் கேல் கேடாட், நடிகர் ஜேய்மி டோர்னன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் அலியா பட் வில்லியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget