Rocketry OTT Release Date: இனி வீட்டிலேயே ராக்கெட்டை பார்க்கலாம்! ஓடிடியில் வெளியாகும் மாதவன் படம்!
ராக்கெட்ரி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் மாதவனை பாராட்டி தள்ளினர். பல ஊர்களில் மாணவர்களுக்கு இப்படத்தை கொண்டு சேர்க்கும் வகையில் தியேட்டர்கள் செயல்பட்டன.
நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் சாக்லேட் பாய் அந்தஸ்தோடு வலம் வந்த நடிகர் மாதவன் தற்போது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் நடிப்பதை காட்டிலும் மாதவனுக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதனை நிறைவேற்றும் விதமாக தற்போது இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்கியுள்ளார்.
Overflow of Kids Crowd for Madhavan's #Rocketry 😍
— Ram Muthuram Cinemas (@RamCinemas) July 15, 2022
This morning Ken Bridge School Kids came to Watch the movie in our venue !!@ActorMadhavan pic.twitter.com/IiqAYNEqhR
ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தில் நம்பி நாராயணாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் கதை , திரைக்கதை , இயக்கம் என அனைத்தையும் மாதவனே கையாண்டுள்ளார். இந்த படத்தில் சிம்ரன், சூர்யா, ஷாரூக்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முன்னதாக நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் இந்த படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்ததாக தெரிவித்திருந்தார்.
ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் திரைப்படம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி தியேட்டர்களில் படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் மாதவனை பாராட்டி தள்ளினர். பல ஊர்களில் மாணவர்களுக்கு இப்படத்தை கொண்டு சேர்க்கும் வகையில் தியேட்டர்கள் செயல்பட்டன. இந்நிலையில் ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
hop on for a space adventure 🚀#RocketryOnPrime, July 26 pic.twitter.com/W3JDZEz2eD
— amazon prime video IN (@PrimeVideoIN) July 20, 2022
அதன்படி அமேசான் ஓடிடி தளத்தில் இப்படம் ஜூலை 26 ஆம் தேதி முதல் இடம் பெறும் எனவும், ரசிகர்கள் கண்டு மகிழுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்