மேலும் அறிய

"விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிச்சது கடுப்பா இருந்துச்சு.." மனம் திறந்த ஆர்ஜே பாலாஜி!

விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்தது தனக்கு கடுப்பாக இருந்ததாக நடிகரும், இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். போடா போடி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி:

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசும்போது,

கடுப்பாக இருந்தது:

என் முன்னாடிதான் விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல் கதை ஒவ்வொரு படிக்கட்டா வளந்துச்சு. முதல்ல என்கிட்ட வந்து சொன்னப்ப டேய் சும்மா இருடானு சொன்னேன். அப்படிலா இல்லடா.. டேய் நிஜமாவேடா அப்படினு சொன்னான். எனக்கு கொஞ்சம் நம்ப முடியல. கொஞ்சம் கடுப்பாவும் இருந்துச்சு. நிஜமாவும் நயன்தாரா உன்னை லவ் பண்றாங்களானு கேட்டேன். ஆமாடானு சொன்னப்ப எனக்கு இதயம் எல்லாம் வெடிக்குற மாதிரி இருந்துச்சு. ஆனா, அவன் என் நண்பன்.

அப்புறம் ரொம்ப சந்தோஷமா போயிட்டு நயன்தாராகிட்ட கேட்டேன். நீ விக்கியை லவ் பண்றியானு கேக்கும்போது, ஆமாண்ணே அப்படினு சொன்னா. அன்னைக்கு பாத்த காதல் இன்னைக்கும் அவங்க அப்படித்தான் காதலிக்குறாங்க உருகி, உருகி. நயன்தாராவுக்கு விக்கியை பிடிக்கும். அனிருத்திற்கு விக்கியைப் பிடிக்கும். எல்லாருக்கும் பிடிச்ச பிரதீப் ரங்கநாதன் அவரைப் பிடிச்சு படம் பண்றாங்க.

இவ்வாறு அவர் கூறினார்.

நண்பர்கள்:

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா இடையே நட்பு உருவாகி அது காதலாக மாறியது. பின்னர், இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். நானும் ரவுடிதான் படத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்திருந்தார்.

பின்னர், அவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்தார். நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஆர்ஜே பாலாஜி ஆகிய 3 பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.  

தலைப்பு செய்திகள்

விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget