மேலும் அறிய

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன்லால்.. சங்கத்தின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியதால் சர்ச்சை

ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய மலையாள வார இதழான 'கேசரி' நடத்திய நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லால் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய மலையாள வார இதழான 'கேசரி' நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று, அந்த அமைப்பின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் மோகன்லால்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கேசரி வார இதழின் முன்னெடுப்பில் அமைக்கப்பட்டுள்ள மாதங்கி மல்டிமீடியா ரெக்கார்டிங் ஸ்டுடியோவை மோகன்லால் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மோகன்லால், கேசரி இதழை உருவாக்குவதில் சங்கத் தொண்டர்கள் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டினார். தேசப்பற்று மற்றும் தேசிய உணர்வை அடிப்படையாகக் கொண்டு பத்திரிகைத் துறையிலும் சமூகப் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த இதழ் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும், "இந்த முயற்சியின் மூலம் சங்கம் ஒரு கலாசாரப் பொறுப்பை நிறைவேற்றி வருகிறது. நாடு இருந்தால்தான் அதன் கலாசாரமும் இருக்கும். கேசரி தனது ஒவ்வொரு செயல்பாட்டின் மூலமாகவும் இந்த உண்மையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது" என்று பேசினார்.

கேசரி இதழை சுயமரியாதை மற்றும் தேசப்பற்றின் அடையாளமாகக் குறிப்பிட்ட மோகன்லால், இந்தியாவின் சிறந்த கலாசார மரபுகள் குறித்த கருத்துகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் இந்த இதழ் முக்கியப் பங்காற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்த மறைந்த பி. பரமேஸ்வரனின் பங்களிப்பையும் அவர் நினைவுகூர்ந்தார். சுவாமி விவேகானந்தர் மற்றும் ஸ்ரீ அரவிந்தரின் போதனைகளை மலையாள மக்களின் மனதில் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு கேசரி இதழின் வாயிலாக பரமேஸ்வரன் முக்கியப் பங்காற்றியதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தனது திரைப்பயணம் குறித்துப் பேசிய மோகன்லால், ராணுவம் மற்றும் தேசப்பற்றை மையமாகக் கொண்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளதாகத் தெரிவித்தார். அந்தப் படங்களின் படப்பிடிப்பின்போது ராணுவ முகாம்கள் மற்றும் நாட்டின் எல்லைப் பகுதிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அங்கு ராணுவ வீரர்களுடன் நேரத்தைச் செலவிட்ட அனுபவம் தேசப்பற்றைப் புத்தகங்களில் படிப்பதைத் தாண்டி நேரடியாக உணரச் செய்ததாகவும் கூறினார்.

"நமது எல்லைகளில் ராணுவ வீரர்கள் காவல் காப்பதால்தான் நாம் பாதுகாப்பாக வாழ முடிகிறது. நாட்டைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிரையும் பணயம் வைக்கும் அந்த வீரர்களின் இதயத் துடிப்பில்தான் உண்மையான தேசப்பற்றைக் காண முடிகிறது" என்றும் பேசினார்.

தற்போது தான் நடித்து வரும் 'ஆபரேஷன் கங்கா' திரைப்படமும் தேசப்பற்றை மையமாகக் கொண்டது என்று குறிப்பிட்ட மோகன்லால், சினிமாவின் மூலமாகவும் தேசப்பற்றை வெளிப்படுத்தத் தொடர்ந்து பங்களிப்பேன் எனத் தெரிவித்தார். குறிப்பாக, தேசப்பற்றும் தேசிய உணர்வும் வெறும் முழக்கங்களாக இல்லாமல், அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட வேண்டிய கலாசாரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கைதாகிய ஸ்ரேயா.. கேக் வெட்டிய சாமுண்டீஸ்வரி குடும்பம்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கைதாகிய ஸ்ரேயா.. கேக் வெட்டிய சாமுண்டீஸ்வரி குடும்பம்..! கார்த்திகை தீபத்தில் இன்று
Cheran:
Cheran: "மன நோயாளி.. கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.." வாட்டர்மெலன் ஸ்டாரை விளாசித் தள்ளிய சேரன்!
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
Kallakurichi MLA: மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
Kallakurichi MLA: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
கள்ளக்குறிச்சி MLA சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
Udhayanidhi:
Udhayanidhi: "பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கத்தான் ஆட்சியா?" முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கேள்வி
UPSC படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
UPSC படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதியுதவி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
Kallakurichi MLA:கள்ளக்குறிச்சி தவெக MLA மீது மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
கள்ளக்குறிச்சி தவெக MLA மீது மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
புயல், வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ரூ.1.46 கோடியில் பாதுகாப்பு மையங்கள் சீரமைப்பு!
புயல், வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க ரூ.1.46 கோடியில் பாதுகாப்பு மையங்கள் சீரமைப்பு!
Embed widget