Red Giant: ஒரே நாளில் இரு படங்களை களமிறக்கும் உதயநிதி ஸ்டாலின்... வெளியானது அறிவிப்பு!
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஒரே பேனரின் கீழ் விநியோகம் செய்யும் படங்களான காஃபி வித் காதல் மற்றும் லவ் டுடே என இரெண்டு படங்களையும் நவம்பர் 4 அன்று திரையரங்களில் வெளியிட போவதாக செய்தியை வெளியிட்டுள்ளது

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஒரு சிறப்பான ஒரு அறிவிப்பை தீபாவளி பரிசாக அறிவித்துள்ளது. அவர்கள் விநியோகம் செய்யும் இரண்டு படங்கள் ஒரே நாளின் ரீலீஸாக உள்ளன என்பது தான் அந்த அறிவிப்பு.
தென்னிந்திய சினிமா இன்று அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து சாதனை படைத்தது வருவதோடு சர்வதேச அளவில் நம்முடைய படங்களுக்கு ஒரு வரவேற்பை பெற்று தந்துள்ளது. சிறந்த படங்களை உருவாக்குவதோடு அதை சிறப்பான முறையில் திரையரங்குகளில் விநியோகம் செய்வது என்பது ஒரு படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கியமா காரணம். அந்த வகையில் பல படங்களை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெரும் பங்கு வகித்து வருகிறது.
ஒரே பேனரில் வெளியாகும் இரெண்டு படங்கள் :
ஒரே பேனரின் கீழ் விநியோகம் செய்யப்படும் இரண்டு படங்களான காஃபி வித் காதல் மற்றும் லவ் டுடே இவ்விரண்டும் நவம்பர் 4ம் தேதியன்று ஒரே நாளில் வெளியாகவுள்ளன என்ற ஒரு மகிழ்ச்சியான செய்தியை தீபாவளி பரிசாக வெளியிட்டுள்ளனர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். இது ஒரு அரிதான நிகழ்வு என்பதால் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள் ரசிகர்கள்.
அப்பா லாக் ஷார்ட் பிலிம் தொடர்ச்சி :
"கோமாளி" படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் "லவ் டுடே". ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சத்யராஜ், இவானா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. பிரதீப் இயக்கியிருந்த ஷார்ட் பிலிம் "அப்பா லாக்" படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இளம் தம்பதியினர் ஒரு நாள் தங்களின் மொபைல் போனை பரிமாறிக்கொள்வதாக சவால் விட்டு கொள்கின்றனர். அதனால் ஏற்படும் ஸ்வாரசியமான நிகழ்வுகள் தான் படத்தின் கதை. இப்படத்தின் நவம்பர் 4ம் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றி இருந்தது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.
Nov 4 | Red Giant Vs Red Giant! pic.twitter.com/ivqzKNWEA0
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 25, 2022
நகைச்சுவை கலந்த முக்கோண காதல் கதை :
சுந்தர் சி இயக்கத்தில் ஒரு பெரிய திரை பட்டாளம் நடித்துள்ள நகைச்சுவை கலந்த முக்கோண காதல் கதை தான் "காஃபி வித் காதல்: திரைப்படம். இப்படத்தில் ஜெய், ஸ்ரீகாந்த், ஜீவா மற்றும் சின்னத்திரை நட்சத்திரம் திவ்யதர்ஷினி உள்ளிட்டர் நடித்துள்ள இப்படத்தை பென்ஸ் மீடியா மற்றும் குஷ்பூ சுந்தரின் அவ்னி சினிமேக்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இதன் சாட்டிலைட் உரிமையை ஜீ 5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
#CoffeeWithKadhal From Nov 4 pic.twitter.com/tetR1qnHvD
— Karthik Ravivarma (@Karthikravivarm) October 24, 2022
போட்டியிடும் இரெண்டு படங்கள் :
இந்த இரெண்டு படங்களையும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். அவர்கள் விநியோகம் செய்யும் இரெண்டு படங்கள் நவம்பர் 4ம் தேதி வெளியாகின்றன என்பதை மிகவும் சந்தோஷமாக வெளியிட்டுள்ளனர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

