Ranveer Singh : ரூ.119 கோடி.. 4 BHK.. ஷாருக்கான் சுற்றம்.. அதிரடி காட்டிய தீபிகா கணவர் ரன்வீர் சிங்
ஆம் நீங்கள் சரியாகத் தான் படித்தீர்கள். ரூ.119 கோடி தான்.. 11 கோடியையோ அல்லது 19 கோடியையோ நாங்கள் தவறுதலாக அடிக்கவில்லை. ரன்வீர் சிங், ரூ.119 கோடிக்கு தான் சொகுசு பங்களாவை வாங்கியுள்ளார்.
ஆம் நீங்கள் சரியாகத் தான் படித்தீர்கள். ரூ.119 கோடி தான்.. 11 கோடியையோ அல்லது 19 கோடியையோ நாங்கள் தவறுதலாக அடிக்கவில்லை. ரன்வீர் சிங், ரூ.119 கோடிக்கு தான் சொகுசு பங்களாவை வாங்கியுள்ளார்.
ரன்வீர் சிங் இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு பரீட்சியமானவர். பாலிவுட்டின் அசைக்க முடியாத நட்சத்திரங்களுள் ஒருவர். ரன்வீர் இந்தியான பல்கலை கழகத்தில் பட்டம் பெற்றவர். சிறு வயதுலேயே மேடை நாடகம் , பள்ளி விழாக்கள் என நடிப்பு மீது அதீத ஆர்வம் உடையவராக இருந்திருக்கிறார். சினிமா மீது அதீத ஈடுபாடு கொண்டதால் தனது கெரியரை பாலிவுட் நோக்கி திருப்பினார். 2010 ஆம் ஆண்டு வெளியான பேண்ட் சர்மா பாராத் என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமனார். அனுஷ்கா ஷர்மாவிற்கு ஜோடியாக நடித்த ரன்வீருக்கு முதல் படமே கம்ர்ஷியல் ஹிட்டானது. நகைச்சுவை காதல் படமான அந்த படத்தில் அபார நடிப்பை வெளிப்படுத்தியதால் , அறிமுக நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதும் கிடைத்தது.
ரன்வீர் சிங் எப்போதுமே வித்தியாசமாக உடை அணியக்கூடியவர். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட அவர் அதனை அத்தனை நம்பிக்கையுடன் அணிந்து வருவதை பார்த்தால் ஃபேஷன் மீது ரன்வீருக்கு இருக்கும் ஈடுபாடு வெளிப்படையாகவே தெரியும். உடைக்கு ஏற்ற மாதிரி சிகை அலங்காரத்தை மாற்றுவதுதான் ரன்வீரின் ஸ்டைல் . பாலிவுட்டின் ஸ்டைல் ஐகானாக ரன்வீர் கொண்டாடப்படுகிறார்.
இந்த ஸ்டைல் ஐகான், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை 2013 முதல் காதலித்து வந்தார். நீண்ட நாட்களாக காதலில் இருந்த ஜோடிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்துக்கொண்டனர்.
சல்மான், ஷாருக் அண்டைவீட்டுக்காரர் ஆகிறார்:
மும்பையின் பாந்த்ரா பகுதி கொளுத்த பணக்காரர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என செலிப்ரிட்டிகள் அதிகம் வாழும் பகுதியாக அறியப்படுகிறது. இந்தப் பகுதியில் தான் ரன்வீர் சிங் வீடு வாங்கியுள்ளார். குவாட்ராப்ளக்ஸ் குடியிருப்பை அவர் வாங்கியுள்ளார். சாகர் ரேஷம் அடுக்குமாடி குடியிருப்பின் 16, 17, 18, 19 வது மாடிகளில் ரன்வீரின் புதிய சொத்து உள்ளது. Oh Five Oh Media Works LLP என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த பரப்பளவு 11,266 சதுர அடியாக உள்ளது. மொட்டைமாடி மட்டும் 1,300 சதுரடி. இந்த குடியிருப்புகளுக்கு 19 பார்க்கிங் ஸ்லாட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சொத்தை முடிக்க வரி மட்டும் 7.13 கோடி கட்டியுள்ளனர்.
இந்த வீடு ஷாருக்கானின் ஜன்னத் மஹால், சல்மான் கானின் பங்களாவுக்கு அருகில் உள்ளது. அந்தப் பகுதியில் வீடு வாங்குவது என்பது ரன்வீரின் நீண்ட கால கனவாக இருந்துள்ளது. இப்போது தனது கனவு மெய்ப்பட்ட மகிழ்ச்சியில் ரன்வீர் இருப்பதாகக் கூறப்படுகிறது.