Puneeth Rajkumar: புனித் ராஜ்குமார் சிலையை பெற்ற ராணா டக்குபதி: 'மிஸ் யூ மை ஃப்ரெண்ட்' என உருக்கம்!
இந்த உருக்கமான பதிவை ராணா டகுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத புனித் ராஜ்குமாரின் மரணத்தை நினைவூட்டுகிறார்.
![Puneeth Rajkumar: புனித் ராஜ்குமார் சிலையை பெற்ற ராணா டக்குபதி: 'மிஸ் யூ மை ஃப்ரெண்ட்' என உருக்கம்! Rana Daggubati says Miss you my friend as he receives a golden bust of late Puneeth Rajkumar Puneeth Rajkumar: புனித் ராஜ்குமார் சிலையை பெற்ற ராணா டக்குபதி: 'மிஸ் யூ மை ஃப்ரெண்ட்' என உருக்கம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/03/0cf721fbc39432002c6a8b0670bdfd041664799489838501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கன்னட மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் நபர்களில் ஒருவர் நடிகர் புனித் ராஜ்குமார். அவரது தலைமுறையில் மிகவும் விரும்பப்பட்ட நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார், கன்னடத் திரைப்பட உலகின் பெரும் நட்சத்திரமான ராஜ்குமாரின் மகன் ஆவார். உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களால் அவர் அப்பு என்று அழைக்கப்படுகிறார், அதற்கான காரணம் என்ன? மேலும், கன்னட மக்களுக்கு மிகவும் நெருக்கமான, மிகவும் விரும்பப்படும் அந்தப் பெயரை அவர் எவ்வாறு பெற்றார்?. அப்பு என்பது அவர் நடித்த முதல் திரைப்படத்தின் பெயர். ஆம், 2002ம் ஆண்டில், இயக்குனர் பூரி ஜெகநாத் தனது எண்டர்டெயினர் படமான 'அப்பு'வில் அவரை ஒரு முன்னணி பாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார். புனீத் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்த முதல் படம் மிகவும் பிரபலமானது, படத்தின் தலைப்பின் அடிப்படையில் பின்னாளில அவர் அனைவராலும் அப்பு என அழைக்கப்படலானார்.
View this post on Instagram
புனித் ராஜ்குமார் கன்னடத் திரையுலகத்தில் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். 'A Man with no haters' என்கிறது அவரை அறிந்த வட்டாரங்கள். புனித் ராஜ்குமார் இறந்து ஒரு வருடம் ஆகப் போகும் நிலையில் ராணா டகுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் புனித் ராஜ்குமார் உடைய கோல்டன் மார்பளவு சிலை ஒன்றை பதிவிட்டு " மிஸ் யூ மை ஃபிரண்ட்" என்று குறிப்பிட்டுள்ளார் இந்த பதிவை பார்க்கும் பொழுது இவர்களுக்கு இடையேயான நட்பு எப்படி இருந்திருக்கும் என்று உணர முடிகிறது. அது மட்டுமல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஒரு வழியாக இந்த சிலை என்னுடைய ஆஃபீஸிற்கு வந்துவிட்டது என்றும்" நீங்கள் இப்பொழுது பார்த்துக் கொண்டிருப்பது ஒரு சிறந்த பொருள் " எனக் குறிப்பிட்டு இருந்தார் ராணா டகுபதி.
The most beautiful memory came into my office today. Miss you my friend. #PuneethRajkumar pic.twitter.com/V8UghfeuX3
— Rana Daggubati (@RanaDaggubati) October 3, 2022
இந்த உருக்கமான பதிவை ராணா டகுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத புனித் ராஜ்குமாரின் மரணத்தை நினைவூட்டுகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)