மேலும் அறிய

Ram Charan | 231 கிமீ நடந்தே வந்த ரசிகர்கள் - ஆரத்தழுவி வரவேற்ற ராம் சரண்!

தெலுங்கானாவின் ஜோகுலாம்பா கட்வால்  மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட மூவரும் 231 கிலோ மீட்டர் பயணம் செய்து , ஐதராபாத்தில் உள்ள ராம் சரண் இல்லத்திற்கே சென்று அவரை சந்தித்தனர்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண்.  இவருக்கு ஏராளமான  ரசிகர்கள் உள்ளனர். தற்பொழுது ராஜமௌளி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த நிலையில் நடிகர் ராம் சரணின் தீவிர ரசிகர்கள் மூவர் அவரை  சந்திக்க ஹைதராபாத் வரை நடந்து சென்ற சம்பவம் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Ram Charan | 231 கிமீ நடந்தே வந்த ரசிகர்கள் - ஆரத்தழுவி வரவேற்ற ராம் சரண்!

ராம் சரணுக்கு தெலுங்கானா , ஆந்திரா போன்ற இடங்களில் ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில்  ராம் சரணின் தீவிர ரசிகர்களான சந்தியா ஜெயராஜ், ரவி, வீரேஷ் ஆகியோருக்கு அவரை சந்திக்க வேண்டும் என்ற திட்டம் நீண்ட காலமாக இருந்ததாக தெரிகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்து உள்ளிட்ட  போக்குவரத்து சேவைகளை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டிந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. எனவே நடந்து சென்றாவது தங்கள் நாயகனை சந்திக்க வேண்டும் என முடிவெடுத்த மூவரும் தங்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

தெலுங்கானாவின் ஜோகுலாம்பா கட்வால்  மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட மூவரும் 231 கிலோ மீட்டர் பயணம் செய்து , ஐதராபாத்தில் உள்ள ராம் சரண் இல்லத்திற்கே சென்று அவரை சந்தித்தனர். தன்னை சந்திக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் , 4 நாட்கள், 231 கிமீ பயணம் செய்த ரசிகர்களின் செயலை கண்டு நெகிழ்ந்துபோன  ராம் சரண் அவரை ஆரத்தழுவி வரவேற்று, உபசரித்து அவர்கள் மூவருடனும் மணிக்கணக்கில் உரையாடிள்ளார்.  தங்களின் நோக்கம் நிறைவேறியதை அடுத்து மூவரும் இன்முகத்துடன் வீடு திரும்பியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Ram Charan | 231 கிமீ நடந்தே வந்த ரசிகர்கள் - ஆரத்தழுவி வரவேற்ற ராம் சரண்!

ரசிகர்களின் இது போன்ற அதி தீவிர அன்புகளை சமாளிக்க முடியாமல் நடிகர்கள் திக்குமுக்காடி விடுவது  அவ்வபோது அரங்கேறி வரும் ஒரு நிகழ்வுதான். இப்படித்தான் சமீபத்தில்  ஈஸ்வரன் , பூமி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு, சென்னையில் ரசிகர்கள்  சிலை வைத்து அவரை மெய்சிலிர்க்க செய்தனர். இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ள நிதி அகர்வாலுக்கு சிலை வைத்த சம்பவம் பலரையும் ஆச்சர்யபடுத்தியது. அச்சு அசலாக  அவரை போலவே சிலை வடிமைத்த ரசிகர்கள் அவருக்கு கற்பூரம் காட்டி மலர்கள் தூவி உச்ச அன்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

Ram Charan | 231 கிமீ நடந்தே வந்த ரசிகர்கள் - ஆரத்தழுவி வரவேற்ற ராம் சரண்!

இதனை அறிந்த நிதி அகர்வால் , ”ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அளவில்லாத அன்பை பார்த்து நெகிழ்ந்து போய் விட்டேன் . எனக்காக கட்டியிருக்கும் இந்த கோவிலை ஏழைகளின் இருப்பிடமாக அல்லது அவர்களுக்கு உணவு அளிப்பதற்கோ இல்லையென்றால்  கல்விக்காகவோ பயன்படுத்துங்கள், உங்களுக்கு நான் என்றும் ஆதரவாக இருப்பேன்” என தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
CHN Power Shutdown(08.07.25):அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?!  எங்கெங்கன்னு தெரியுமா.?
அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?! எங்கெங்கன்னு தெரியுமா.?
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
CHN Power Shutdown(08.07.25):அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?!  எங்கெங்கன்னு தெரியுமா.?
அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?! எங்கெங்கன்னு தெரியுமா.?
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
BLON BL03 II: காதில் பாட்டு சுகமா கேக்கனுமா? BLON BL03 II ஹெட்செட் போட்டு கேளுங்க..
BLON BL03 II: காதில் பாட்டு சுகமா கேக்கனுமா? BLON BL03 II ஹெட்செட் போட்டு கேளுங்க..
Embed widget