மேலும் அறிய

Rajinikanth: ரங்கராஜ் பாண்டே தந்தை மரணம்; நேரில் வந்து அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்!

Rangaraj Pandey Father Death: மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாசார்யா என்ற ராம்சிங்ஹாசன் பாண்டே நேற்று இரவு காலமானார். அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் ரஜினிகாந்த்.

தந்தி டிவி மற்றும் தினமலர் நாளிதழில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரான ரங்கராஜ் பாண்டே தற்போது தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்; அவரின் தந்தை ரகுநாதாசார்யா என்ற ராம்சிங்ஹாசன் பாண்டே; இவர் நேற்று இரவு 9:45 மணியளவில் காலமானார். அவரின் வயது 95. இந்த தகவலை ரங்கராஜ் பாண்டே தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் தெரிவித்தார். அவரின் தந்தையின் இறுதி சடங்குகள் இன்று சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வைகுண்ட ஏகதேசியான நேற்று அவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Rajinikanth: ரங்கராஜ் பாண்டே தந்தை மரணம்; நேரில் வந்து அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்!

ரங்கராஜ் பாண்டேவின் தந்தையின் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று பாண்டே மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, அவரின் தந்தையின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ரங்கராஜ் பாண்டே, அவரின் குடும்பத்தாரை ரஜினிகாந்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். பாண்டேவின் தந்தையின் இறப்பிற்கு காரணம் பற்றி ரஜினிகாந்த் கேட்டறிந்தார்; அவரிடம், தந்தை இது வரையில் எந்த ஒரு மருத்துவ சிகிச்சையோ அல்லது ஊசி மாத்திரை என எதுவுமே எடுத்து கொண்டது கிடையாது என்றும் இது இயற்கையான மரணம் என ரங்கராஜ் பாண்டே கூறினார். பின்னர் அனைவரிடமும் இருந்து விடைபெற்று  கொண்டார் ரஜினிகாந்த். அவரை காண அங்கும் ஏராளமான ரசிகர்கள் திரளாக கூடி இருந்தனர்.  

பத்திரிகை துறையில் மிகவும் பிரபலமாக இருந்த ரங்கராஜ் பாண்டே திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர். அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். அப்படத்தில் நடிகர் அஜித்துக்கு எதிராக இவர் பேசிய சில விவாதங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதை தெடர்ந்து க/பெ. ரணசிங்கம் திரைப்படத்திலும் கலெக்டராக நடித்திருந்தார் ரங்கராஜ் பாண்டே.  

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
Embed widget