பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸை முன்னிட்டு இன்று ஜெயிலர் 2 சூப்பர் ஷோ நிகழ்ச்சி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ரிலீஸை முன்னிட்டு ஜெயிலர் 2 படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட ஜெயிலர் 2 சூப்பர்ஷோ நிகழ்ச்சி இன்று சன் நெக்ஸ்ட் நிகழ்ச்சியில் ஸ்ட்ரீமாகியது. இந்த நிகழ்வில் ஜெயிலர் 2 படத்தில் நடித்ததற்கான காரணம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
ஆடியோ லாஞ்ச் ஏன் இல்லை?
ரஜினி பேசுகையில் "வழக்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தான் இசை வெளியீட்டு நடத்துவோம் . ரசிகர்கள் எல்லாம் நீண்ட நேரம் காத்து கிடப்பார்கள். அதனால் அனைவரும் போதுமான நேரம் பேச முடியாது. அதனால் இந்த முறை ஒரு மாற்றத்திற்காக இந்த மாதிரி நடத்த திட்டமிட்டோம். ஆனாலும் ரசிகர்களை சந்திக்க முடியாது என்பது எனக்கு வருத்தம் தான்.
ஜெயிலர் 2 படத்தில் நடித்தது ஏன் ?
ஜெயிலர் 2 படத்தில் நடித்தது குறித்து கூறுகையில் "சீக்வல் என்று ஜெயிலர் 2 படத்தை சொல்லமாட்டேன். ஏனால் சீக்வல் என்றாலே சரக்கு கம்மியாகிடுச்சு , கிரியேட்டிவிட்டி கம்மியாகிடுச்சு என்று சொல்வார்கள். இதேபோல் தான் பாட்சா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று சொன்னார்கள். அதை நான் மறுத்துவிட்டேன். அதேபோல் பேட்ட படத்தின் இரண்டாம் பாகம் கதையை கார்த்திக் சுப்பராஜ் சொன்னார். அதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றது. அதிலும் எனக்கு அந்த உடன்பாடு வரவில்லை. ஜெயிலர் திரைப்படம் வெளியாகி படம் ஓடிடியில் வெளியாகியபோது இன்னொரு முறை படத்தைப் பார்த்தேன். அப்போது நெல்சன் படத்தில் பல இடங்களில் இரண்டாம் பாகத்திற்கான ஹிண்ட் கொடுத்திருந்தார். இது ஒரு பெரிய நெட்வர்க் என வர்மன் கதாபாத்திரம் படத்தில் சொல்வார். ஜெயிலர் கதாபாத்திரத்தை நெல்சன் உருவாக்கியிருக்கும் விதமும் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு சரியாக இருந்தது. அதேபோல் இந்த படத்தில் நான் என்னுடைய வயதை ஒத்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். நெல்சன் பயங்கர புத்திசாலி . ரொம்ப கஷ்டப்பட்டு வந்தார். 18 ஆவது மாடியில் அழகான ஒரு வீடு வாங்கிட்டார். அதைப் பார்த்து எனக்கே பொறாமை இருந்தது. அவருக்கு குடி , சிகரெட் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. நல்லா சாப்பிடுவாரு. மாலுக்கு போய் எதுவும் வாங்க மாட்டார் சும்மா சுத்தி பார்ப்பார்.
ஜெயிலர் 2 படம் பண்ணலாம் என்று நெல்சனிடம் கேட்டபோது அவர் அதை மறுத்துவிட்டார். ஆனால் ஒரு மாதத்திற்கு பின் எனக்கு ஃபோன் செய்து ஜெயிலர் 2 படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். படத்தின் கதையை எழுத சில மாதங்கள் அவகாசம் கேட்டுவிட்டு பொறுமையாக கதையை எழுதி வந்தார். அப்படி உருவான ஜெயிலர் 2 படத்தை தான் இப்போது நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். அனிருத் ஒரு பிரம்ம ரிஷி மாதிரி. ஒரு படம் எப்படி என்று அவரிடம் கேட்டால் சரியாக சொல்லிவிடுவார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















