மேலும் அறிய

ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கும், பிரபல நடிகை மனோரமாவிற்கும் இடையே நடந்த மோதல் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். சுமார் 125 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்து தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர். ரஜினிகாந்தின் கருத்துக்கள் எப்போதும் பரபரப்பை தமிழ்நாட்டில் உருவாக்குவது வழக்கம். சமீபத்தில் தவெக-வின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அவரைப் பற்றி கூறிய கருத்துக்கு ரஜினிகாந்த் பதில் தெரிவித்து இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

ரஜினி - மனோரமா இடையே சண்டையா?

இந்த நிலையில், ரஜினிகாந்திற்கும், தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகையாக உலா வந்த மறைந்த நடிகை மனோராமாவிற்கும் இடையே மோதல் இருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த் தொடக்க காலம் முதலே கருணாநிதியுடன் நல்ல நட்புறவில் இருந்து வந்தார். அவருக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே தொடக்க காலத்தில் மனக்கசப்பு இருந்து வந்தது. பின்னர், ரஜினிகாந்த் 1996 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவிற்கு எதிராக அளித்த பேட்டி மொத்த தமிழ்நாட்டையே பரபரப்பாக்கியது. 

பழம்பெரும் நடிகையான மனோரமா எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருடனும் நெருக்கமான உறவு கொண்டவர். ஜெயலலிதாவுடன் பல படங்களில் அவருக்கு தோழியாக நடித்த மனோரமா அதிமுக அபிமானியாகவும் இருந்தார். 

நடந்தது என்ன?

1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக-விற்கு ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் பேசியிருப்பார். அப்போது, அதிமுக-விற்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் மனோரமா ஈடுபட்டார். அப்போது, தேர்தல் பரப்புரை மேடையில் நடிகர் ரஜினிகாந்தை நடிகை மனோரமா மிகவும் காரசாரமாக விமர்சித்திருப்பார். சூப்பர்ஸ்டாராக உலா வந்தவரை பழம்பெரும் நடிகை விமர்சித்தது அப்போது பெரும் பேசுபொருளாக மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டது. இந்த தகவலை பிரபல நடிகரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தனது யூ டியூப் தொலைக்காட்சியில் தெரிவித்திருப்பார்.

சமரசம் ஆனார்களா?

பின்னர், இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டை மறந்து இருவரும் அருணாச்சலம் படத்தில் அடுத்தாண்டு இணைந்து நடித்தனர். தர்ம யுத்தம், அடுத்த வாரிசு, பில்லா, குரு சிஷ்யன், எஜமான், அண்ணாமலை என ஏராளமான படங்களில் அவருடன் இணைந்து இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதேசமயம், அருணாச்சலம் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் - மனோரமா இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

அதிமுக அபிமானியாகவும், ஆதரவாளராகவும் இருந்தாலும் மனோரமா கருணாநிதியுடனும் நல்ல நட்புறவில் இருந்தார். பின்னர், கருணாநிதி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேடையில் மனோரமா, ரஜினிகாந்த் ஒரே மேடையில் பங்கேற்றார். மனோரமா தமிழ் சினிமாவின் நட்சத்திரங்களான எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் என அனைத்து பிரபலங்களுடனும் நடித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
Embed widget