Jailer: அமெரிக்காவிலும் அதிரடி... ரீலிசுக்கு முன்பே வசூல் வேட்டை செய்யும் ரஜினிகாந்த்... பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக மாறுமா ஜெயிலர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் ரிலீசுக்கு முன்பாகவே வசூலை அள்ளி வரும் நிலையில், வாரிசு, துணிவு படங்களில் வசூல் சாதனையை இப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்சன் இயக்கி ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தனது கரியரில் மிக முக்கியமான திரைப்படமாக ஜெயிலர் படம் இருக்கும் என படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே ரஜினி குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆண்டின் மிகப்பெரிய கலெக்ஷன் அள்ளும் படமாக படமாக ஜெயிலர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் படம் வெளியாவதற்கு முன்பாகவே வசூல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது படம்.
அமெரிக்காவில் அலைமோதும் ரசிகர் கூட்டம்
USA🇺🇸 Premiere Advance Sales#Jailer
— Manobala Vijayabalan (@ManobalaV) August 9, 2023
Gross - $ 802,628 [₹ 6.64 cr]
Locations - 340
Shows - 815
Tickets - 37116#BholaaShankar
Gross - $ 183,391 [₹ 1.51 cr]
Locations - 319
Shows - 868
Tickets - 8180 pic.twitter.com/cH7FKDV5mq
ரஜினி ரசிகர்கள் இந்தியா முதல் ஜப்பான் வரை உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். ஒவ்வொரு ரஜினி படத்தையும் ஒன்று திரண்டு கோலாகலமாக அவர்கள் கொண்டாடுவது வழக்கம். தற்போது நாளை வெளியாக இருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கான முன்பதிவுகள் நடந்து வரும் நிலையில் ஏற்கெனவே அமெரிக்காவில் மட்டுமே மொத்தம் 6.66 கோடிகளுக்கு டிக்கெட் விற்பனையை ஈட்டியுள்ளது.
ஜெயிலர் திரைப்படம். சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘போலா ஷங்கர்’ படத்தை பின்னுக்குத் தள்ளி டிக்கெட் விற்பனைகளில் சிகரம் தொட்டு வருகிறது ஜெயிலர்.
நிரம்பி வரும் இந்திய திரையரங்குகள்
Advance Booking for Opening Day as of now
— Manobala Vijayabalan (@ManobalaV) August 8, 2023
Chennai #Jailer - ₹ 3.46 cr #BusinessMan4K - ₹ 5 lacs #BholaaShankar - ₹ 1 lacs
Bengaluru #Jailer - ₹ 4.70 cr #BusinessMan4K - ₹ 13 lacs #BholaaShankar - ₹ 9 lacs pic.twitter.com/gNsXxIN7ET
வெளிநாடுகளிலேயே இப்படி என்றால் இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் கேட்கவா வேண்டும்! சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டும் முன்பதிவின் மூலம் 8 கோடிகள் வசூல் ஈட்டியிருக்கிறது. இந்தியா முழுவதும் ஜெயிலர் திரைப்படம் 12.83 கோடிகளை முன்பதிவு வாயிலாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணிவு , வாரிசு எல்லாம் ஜுஜுபி
In ALL Markets (Domestic and International), #Jailer is looking at a possible 2023 's No.1 Day 1 Opening record for a Tamil movie..
— Ramesh Bala (@rameshlaus) August 9, 2023
Currently, #Thunivu, #Varisu and #PS2 hold Opening day records in different markets for 2023..
2023ஆம் ஆண்டு அதிக வசூல் ஈட்டிய இரண்டு படங்களான அஜித் குமாரின் துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களின் முதல் நாள் வசூலை ஜெயிலர் மிக எளிதாகக் கடந்துவிடும் என்று யூகிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் முதல் நாளில் மட்டும் மொத்தம் 45 கோடி ரூபாயை ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்யும் என திரைப்பட ஆர்வலர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் திரைப்படம், வரும் ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராஃப், விநாயகன், யோகிபாபு, ஷிவ ராஜ்குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.