மேலும் அறிய

Super Star: விஜய்க்கு ஆதரவாக பேசிய யூடியூப் பிரபலம்! - கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்..! நடந்தது என்ன?

SuperStar: சூப்பர் ஸ்டார் ரஜினியை தரக்குறைவாக பேசியதாக யூடூபர் பிஸ்மியை ரஜினி ரசிகர்கள் முற்றுக்கையிட்டுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று கூறியதைக் கண்டித்து ரஜினி ரசிகர்கள் யூடியூபர் பிஸ்மியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய், மற்றும் அஜித் ஆகியோரது திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு திரைக்கு வருகின்றன. துணிவு திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸும், வாரிசு திரைப்படத்தையும் ரெட் ஜெயண்ட் மற்றும் மற்ற விநியோக நிறுவனங்களும் விநியோகம் செய்கின்றன. தெலுங்கில் தயாரிப்பாளர் தில் ராஜுவே நேரடியாக விநியோகம் செய்கின்றார். முன்னதாக வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்களுக்கு சரிக்கு சமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், விஜய்க்கு அதிக தியேட்டர்கள் வேண்டும் என்று தயாரிப்பாளர் தில்ராஜு கூறியிருந்தார். தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் ஃபேமஸ். அதனால் வாரிசு திரைப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் வேண்டும் என்று கூறியதோடு, அதிக தியேட்டர்கள் கேட்டு உதயநிதியை சந்திக்க இருப்பதாக தில் ராஜு கூறியிருந்தார்.

பின்னர், சென்னை, செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளின் விநியோக உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றது. இந்த நிலையில், இது தொடர்பாக பேசியிருந்த திரைத்துறை பத்திரிகையாளர் பிஸ்மி, விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார்; ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார். தில் ராஜு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை மக்கள் விஜயை அந்த இடத்தில் வைத்துவிட்டார்கள் என்று  கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அஜித் விஜய் ரசிகர்கள் மோதல் என்ற நிலை மாறி, விஜய் ரஜினி ரசிகர்கள் மோதல் என்ற நிலையை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியது.

பிஸ்மியின் இந்த கருத்தால் வெகுண்டெழுந்த ரஜினி ரசிகர்கள் சிலர், பிஸ்மியின் வலைப்பேச்சு அலுவலகத்திற்குச் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. “விஜயை உயர்த்தியும் தலைவரை தாழ்த்தியும் பேசுகிறீர்கள். ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று சொன்னதை ஊடகத்திலேயே வாபஸ் வாங்க வேண்டும்” என்று பிஸ்மியிடம் வலியுறுத்தினர். திடீரென ஒரு ரசிகர் பிஸ்மியை ஒருமையில் பேச, கடுப்பான பிஸ்மி மரியாதையா பேசுறதா இருந்தா பேசுங்க. இல்லனா ஆபிஸவிட்டு வெளியே போங்க என்று கூறினார். ரஜினி ரசிகர்கள், பிஸ்மியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
Maruti Brezza New Features: அட்டகாசமாக அறிமுகமான புதிய பிரெஸ்ஸாவில் 6 அற்புதமான மாற்றங்கள்; என்னென்னன்னு தெரிஞ்சுக்கோங்க
அட்டகாசமாக அறிமுகமான புதிய பிரெஸ்ஸாவில் 6 அற்புதமான மாற்றங்கள்; என்னென்னன்னு தெரிஞ்சுக்கோங்க
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Embed widget