Watch Video: 'கண்கள் நீயே, காற்றும் நீயே...' மகனை பிரிய முடியாமல் ஏர்போர்ட்டில் உருகிய ராதிகா சரத்குமார்..!
தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து டாப் ஸ்டாராக வலம் வந்துள்ள ராதிகா, டப்பிங் கலைஞராகவும் பல நடிகைகளுக்கு குரல் தந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹீரோயின், குணச்சித்திரப் பாத்திரம் என முக்கிய நடிகையாகக் கோலோச்சி ரசிகர்களின் மனங்களை வென்றவர் நடிகை ராதிகா.
பிரபல நடிகை ராதிகா:
பழம்பெரும் தமிழ் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா, 1978ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் ’கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம்பிடித்து கவனமீர்த்து வருபவர் ராதிகா சரத்குமார்
இந்தி, மலையாளம், கன்னடம் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து டாப் ஸ்டாராக வலம் வந்துள்ள ராதிகா, டப்பிங் கலைஞராகவும் பல நடிகைகளுக்கு குரல் தந்துள்ளார். அதேபோல் வெள்ளித்திரையிலும் சித்தி, அண்ணாமலை என பல சீரியல்களின் மூலம் கோலோச்சிய ராதிகா, தற்போது மீண்டும் விஜய் டிவி சீரியல் வழியே தொலைக்காட்சி உலகில் கால் பதிக்க உள்ளார்.
மகனுக்கு பிரியாவிடை
இந்நிலையில், முன்னதாக தன் கணவரும் நடிகருமான சரத்குமார், மகன் ராகுல், மகள் ரேயான் வழி பேரக்குழந்தைகளுடன் ஆகியோருடன் உருக்கமான வீடியோக்களை ராதிகா பகிர்ந்துள்ளார். ராதிகாவின் மகன் ராகுல் சமீபத்தில் சிங்கப்பூரில் பட்டப்படிப்பை முடித்த நிலையில், மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பிய தன் மகனை விடைபெற முடியாமல் ராதிகா கட்டியணைத்து ஏர்போர்ட்டில் அழும் வீடியோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
ராகுல் ஏற்கெனவே ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடியுள்ள நிலையில், விரைவில் தன் பெற்றோர் வழியில் நடிகராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் சீரியல் எண்ட்ரி
சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி, அண்ணாமலை சீரியல்களின் மூலம் மாஸ் காண்பித்த ராதிகா தற்போது விஜய் டிவி மூலம் சீரியல் உலகில் மீண்டும் கால் பதிப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
முன்னதாக இதுகுறித்து தன் இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த ராதிகா, சீரியலின் பிற நடிகர்கள், கலைஞர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிந்ந்திருந்தார். இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான் எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், சஞ்சீவ், ஆனந்த் பாபு, ரேஷ்மா முரளிதரன் உள்ளிட்ட பல சின்னத்திரை நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.
கிழக்கு வாசல் எனும் இந்தப் புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் ஜனரஞ்சக நடிகையான ராதிகாவின் ரீ எண்ட்ரியைக் காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.