Vedaant Madhavan : நீச்சல் போட்டியில் சாதனை படைத்த வேதாந்த் மாதவன்.. குவியும் வாழ்த்துகள்..
நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு நடிகர்கள் அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு நடிகர்கள் அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சாக்லேட் பாயாக அறிமுகமான நடிகர் மாதவன், இன்று உலகத் தரத்தில் நடிக்கும் நடிகராக உருவாகியுள்ளார். இந்நிலையில் அவர் தனது ஒரே மகனை நீச்சல் வீரராக உருவாக்கியுள்ளார். வேதாந்த் மாதவன் பல்வேறு சர்வதேச நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி கண்டிருக்கிறார். இந்நிலையில், அவர் 2022 டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் பங்கேற்று அதில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இது குறித்து மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் அனைவரின் ஆசி மற்றும் இறையருளால் மகன் வேதாந்த் மாதவன் இந்தியாவுக்காக டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். டென்மார்க்கின் கோபென்ஹேகன் நகரில் இந்தப் போட்டி நடந்தது. பயிற்சியாளர் பிரதீப் சாருக்கு மிக்க நன்றி. எஸ்எஃப்ஐ மற்றும் ஏஎன்எஸ்ஏவுக்கு நன்றி. நாங்கள் பெருமித இந்தியர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Thank you so very much sir. We cannot agree more.The entire team and I will put in our best efforts to make sure that happens. Thank you so much again. 🙏🙏🇮🇳🇮🇳 https://t.co/1qT0XeOtWw
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 5, 2021
இந்தப் போட்டியில் வேதாந்த் வெள்ளிப்பதக்கம் வெல்ல, ஃப்ரெட்ரிக் லிண்ட்ஹோம் வெண்கலப் பதக்கமும், அலெக்ஸாண்டர் ஜோர்ன் தங்கப் பதக்கமும் வென்றுள்ளனர்.
மாதவன் இன்ஸ்டாகிராமில் மகனின் வெற்றித் தருண வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
அதில் நடிகர் அபிஷே பச்சன் வாழ்த்து கூறி கைதட்டல் இமோஜியைப் பதிவு செய்துள்ளார். நடிகை இஷா தியோல், சூப்பர் கங்ராஜுலேஷன்ஸ் எனப் பதிவு செய்துள்ளார். ஆனந்த் ராய், ஷில்பா ஷெட்டி போன்ற பல பிரபலங்கள் மாதவனின் மகன் வேதாந்த் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

