CWC Pugazh : ட்ரெண்டாகும் "வேற லெவல்" ராப் பாடல்... புகழ் ரசிகர்களுக்கு மலேசிய பாடகரின் அர்ப்பணிப்பு
ஹிப் ஹாப் மற்றும் ராப் பாடகரான ஏ.கே. ஷோன் நம்ம விஜய் ஸ்டார் புகழை புகழ்ந்து "புகழ் வேற லெவல்" எனும் ஒரு பாடலை இசையமைத்து பாடி அதை புகழ் ரசிகர்களுக்கு டெடிகேட் செய்துள்ளார்.
விஜய் டிவி கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அடி எடுத்து வைத்து இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி மட்டுமின்றி உலக அளவில் பிரபலமானவர் புகழ். அவரின் பிளஸ் பாயிண்டே விசித்திரமான முக பாவனைகள் தான். ஒரே நாளில் ஒபாமா ஆன கதையாக ஒரே நிகழ்ச்சி மூலம் சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரை வரை முன்னேறியவர் புகழ். பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் துணை நடிகராக நடித்துள்ளார். மேலும் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் புகழ்.
நீண்ட நாள் காதலி இன்று மனைவி:
சமீபத்தில் தான் புகழ் தனது நீண்ட நாள் காதலியான பெனிசியாவை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் வரவேற்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் டிவி பிரபலங்களை மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களின் திருமணம் மற்றும் ரிசெப்ஷன் புகைப்படங்கள் மற்றும் போஸ்ட்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வந்தன.
புகழை புகழ்ந்து ராப் பாடல் :
புகழ் ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் ஒரு ராப் பாடலை டெடிகேட் செய்துள்ளனர் மலேசியாவை சேர்ந்த ஏ.கே. ஷோன். மலேசியாவில் உள்ள கஜாங்கைச் சேர்ந்த ஏ.கே. ஷோன், இந்தியத் தமிழ்த் துறையை சேர்ந்தவர். ஹிப் ஹாப் மற்றும் ராப் பாடகரான ஏ.கே. ஷோன் நம்ம விஜய் ஸ்டார் புகழை புகழ்ந்து "புகழ் வேற லெவல்" எனும் ஒரு பாடலை இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலின் நோக்கம் குறித்து அவர் கூறுகையில் எங்கள் அன்பான திறமையான அண்ணன் புகழுக்கு அவரின் ரசிகர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பிக்கப்படுகிறது. தொடர்ந்து எங்களை மகிழ்வித்து எங்களின் இதயங்களில் புன்னகையை வரவைக்கும் எங்கள் அண்ணன் புகழுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
வைரலாகும் புகழின் போஸ்ட்:
"புகழ் வேற லெவல்" எனும் இந்த பாடலை ஏ.கே. ஷோன் மற்றும் வார்ன் இருவரும் சேர்ந்து பாடியுள்ளார்கள். நகரு நகரு நகரு... எனும் இந்த ராப் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ஏ.கே. ஷோன் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடலை டாக் செய்து பகிர்ந்து வரும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார். இந்த போஸ்ட்க்கு ஒரு அழகான பதிவையும் பகிர்ந்துள்ளார் "என்றாவது ஒரு நாள் தேடிவரும் உண்மையாக உழைத்தால்..." என போஸ்ட் செய்துள்ளார்.