'Sol...' lyrical video : பொன்னியின் செல்வன் " சொல்..." பாடல்.. லிரிக்கல் வீடியோ வந்தாச்சு.. உங்க காதுக்குள்ள இனிக்கும்..
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் "சொல்..." பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் "சொல்..." பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் 1 படத்தின் "சொல்..." பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகும் என்ற அறிவிப்பை தொடர்ந்து தற்போது பாடல் யூடியூபில் தற்போது வெளியாகி விட்டது. பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாக நாடைபெற்றது. அந்த விழாவிலேயே அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஸ்பாட்டிஃபை செயலியில் வெளியிடப்பட்டது.
அடுத்தடுத்து வெளியாகும் லிரிக்கல் வீடியோ:
பொன்னியின் செல்வன் படத்தின் சோழா சோழா, பொன்னி நதி பாடலை தொடர்ந்து சொல், அலைகடல், தேவராளன் ஆட்டம், ராட்சச மாமனே உள்ளிட்ட பாடல்கள் வெளியாகின. சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களை கொண்டாடப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் ராட்சச மாமனே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானதை தொடர்ந்து இன்று சொல் பாடலின் லிரிக்கல் விடியோவை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது லைக்கா நிறுவனம். க்ரித்திகா நெல்சன் எழுதிய இந்த பாடல் வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளார் ரக்ஷிதா சுரேஷ். இவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக ஒவ்வொரு லிரிக்கல் வீடியோ பாடல்களாக வெளியாவதால் மிகுந்த சந்தோஷத்தில் குளிர்ந்து போய் உள்ளார்கள் ரசிகர்கள்.
As pleasing as it could get!
— Lyca Productions (@LycaProductions) September 16, 2022
The Lyrical video of #Sol from #PS1 is out now!
▶️ https://t.co/V28uZjJoJn
🎤 @rakshitasuresh
✍🏻 #KrithikaNelson#PonniyinSelvan1 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @trishtrashers #SobhitaDhulipala pic.twitter.com/KsUaGHDaL4
கொள்ளை அழகில் மின்னும் திரிஷா:
சொல்... பாடலில் அழகை அள்ளுகிறார் திரிஷா. இந்த லிரிக்கல் வீடியோ பாடல் யூடியூபிலும் வெளியிடப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி உலகளவில் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் ரிலீஸாக இன்னும் சில நாட்களே இருப்பதால் மிகவும் மும்மரமாக படத்தின் விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர்.
The fight for the Chola throne!
— Madras Talkies (@MadrasTalkies_) September 15, 2022
2 weeks to witness #PS1 on the big screen!
In theatres worldwide from 30th September ⚔️
Releasing in Tamil, Hindi, Telugu, Kannada, and Malayalam.#ManiRatnam @arrahman @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/KCVrXY09YE