பூணம் பாண்டேவைத் தாக்கினாரா..சர்ச்சையில் சிக்கிய சாம் பாம்பே! - யார் இவர்?
திருமணமான மூன்றே மாதங்களில் இந்த வன்முறை நிகழ்ந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இந்தி நடிகை பூணம் பாண்டே தனது கணவர் சாம் பாம்பே தன்னை பலவந்தமாகத் தாக்கித் துன்புறுத்தியதாகப் போலீசில் புகார் எழுப்பியுள்ளார்.இதையடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட பூணம் பாண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருமணமான மூன்றே மாதங்களில் இந்த வன்முறை நிகழ்ந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
யார் இந்த சாம் பாம்பே!
பெயரில் பாம்பே இருந்தாலும் சாம் பிறந்தது என்னவோ துபாயில். திரைப்படங்கள் மற்றும் ஆட் பிலிம்கள் தயாரிப்பாளரான இவருக்கு முதல் திருமணத்தில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.மூன்று வருடங்களுக்கு முன்பு பூணம் பாண்டேவை டேட்டிங் செய்யத் தொடங்கிய சாம், கடந்த கொரோனா காலத்தில் வீட்டிலேயே மோதிரம் மாற்றிக் கொண்டார். செப்டம்பரில் திருமணம் முடிந்த நிலையில் இருவரும் விடுமுறைக்காக கோவா சென்றுள்ளனர். அங்குதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டைகர் ஷெரப்பை முன்னணி நடிகராக்கி சாம் பாம்பே பேஃபிக்கர் என்கிற படத்தையும் இயக்கியுள்ளார். இதுதவிர தீபிகா படுகோன், ரன்பீர் கப்பூர் ஆகியோரைக் கொண்டு பல விளம்பரப் படங்களைத் தயாரித்துள்ளார்.
முன்னதாக, ஹிந்தியில் பிரபல மாடலாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை பூனம் பாண்டே. இவர் கடந்த ஆண்டு செம்படம்பர் மாதம் தயாரிப்பாளரும், படத்தொகுப்பாளருமான சாம் பாம்பேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது சாம் பாண்டே தன்னை அடித்து துன்புறுத்தியதாக கூறி பூனம் பாண்டே காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் மும்பை காவல்துறை சாம் பாண்டேவை கைது செய்துள்ளது.
சாம் பாண்டே தாக்கியதில், காயமடைந்த பூனம் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சாம் தாக்கியதில் பூனம் பாண்டேவின் தலை, கண், முகத்தில் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் முதன் முறை அல்ல. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சாமும், பூனம் பாண்டேவும் தேனிலவுக்காக கோவா சென்றிருந்தனர். அப்போது கணவர் தனனை தாக்கியதாக பூனம் பாண்டே புகார் அளித்த நிலையில், கோவாவில் சாம் கைது செய்யப்பட்டார். அப்போது இனி சாமுடன் வாழப்போவதில்லை என பூனம் பாண்டே கூறினார். இதனையடுத்து ஜாமினில் வெளிவந்த அவர் மீண்டும் பூணம் பாண்டேவுடன் இணக்கமான உறவை கொண்டு வாழ்ந்து வந்தார்.
இந்த தாக்குதல் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய பூனம், “ நான் எனது திருமணத்தை காப்பாற்றிக்கொண்டேன். நீங்கள் ஒருவரை விரும்பினால், எப்படி அதனை விரைவில் விட்டுக்கொடுக்க முடியும். பிரச்னை உருவானதை ஒப்புக் கொள்கிறேன், ஆனால் கண்டிப்பாக நாம் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்